தென்னாபிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பல வெற்றிகளை குவித்து வருகிறது. அதுவும் சாதாரண வெற்றி இல்லாமல், வரலாற்று வெற்றிகளை பெற்று வருகிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வெற்றி வாகையை சூடி தற்போது தென்னாபிரிக்காவிலும் இதே சாதனையை படைக்க கடின பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோர் முதல் டெஸ்டில் சிறப்பாக செயல்பட்டனர். முதல் இன்னிங்ஸில் பும்ராவுக்கு கணுக்கால் சுளுக்கு ஏற்பட்டாலும் அதன்பிறகு அவர் மீண்டும் சிறப்பாக பந்துவீசினார். முதல் டெஸ்டில் வெற்றி பெற்றாலும் இந்திய அணியின் மிடில் ஆர்டர் மோசமாக விளையாடியது. புஜாரா தொடர்ந்து ரசிகர்களை ஏமாற்றி வருகிறார். "புஜாரா தன் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு கடினமாக உழைக்கிறார். அவர் விரைவில் ரன்கள் அடிப்பார்" என்று டிராவிட் கூறியுள்ளார். மேலும், முதல் நாள் 272-3 ரன்களுக்குப் பிறகு முதல் இன்னிங்ஸில் இந்தியா 325 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இது நாம் கவனிக்க வேண்டிய ஒன்று என்றும் கூறியுள்ளார்.
ஜோகன்னஸ்பர்க்கில் அடுத்த ஐந்து நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கூறப்படுகிறது. முதல் டெஸ்டில் ஒரு நாள் வாஷ்-அவுட் ஆன போதிலும், இந்திய அணி வெற்றி பெற்றது. டி காக் ஓய்வு பெற்றதால், ககிசோ ரபாடா மற்றும் லுங்கி என்கிடியை நம்பி தென்னாப்பிரிக்கா அணி உள்ளது. முதல் போட்டியில் வெற்றி பெற்றாலும் இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற கடின முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
ALSO READ | புஜாரா, ரஹானேவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR