Tamil Nadu Lok Sabha Election 2024: இந்தியாவின் 18 வது மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் இந்திய தேர்தல் கமிஷன் மார்ச் 16, சனிக்கிழமையன்று அறிவித்தது. இதனையடுத்து அனைத்து கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். இன்று மாலை 3 மணியுடன் முடிவடைந்த நிலையில், அதற்கு பிறகும் வந்தவர்களுக்கு டோக்கன் முறையில் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. இன்று இதுவரை மனு தாக்கல் செய்தவரின் எண்ணிக்கை மொத்தம் 834 ஆக இருந்தது. அதில் ஆண்கள் 712 பேரும், பெண்கள் 122 பேரும் மனு தாக்கல் செய்தனர். மேலும் இன்று இரவுக்குள் தாக்கல் செய்பவர்க்களின் மனு தாக்கல் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.
வேட்பு மனு தாக்கல் விவரம்
தற்போது வரை இன்று மனுத் தாக்கல் செய்தவர்கள்: 834 பேர். இதில் அதிகபட்சமாக கரூர் 36 வேட்பாளர் வேப்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
-- 20 ஆம் தேதி: 22 பேர்
-- 21 ஆம் தேதி: 9 பேர்
-- 22 ஆம் தேதி: 47 பேர்
-- 25 ஆம் தேதி: 402 பேர்
-- 26 ஆம் தேதி: 259 பேர்
மேலும் படிக்க - தமிழகத்திற்கு மோடி 100 முறை வந்தாலும் பாஜக மண்ணை தான் கவ்வும் - திமுக
மக்களவை தேர்தல் நடைபெறும் தேர்திகள் விவரம்
-- முதல் கட்டம்: ஏப்ரல் 19
-- இரண்டாவது கட்டம்: ஏப்ரல் 26
-- மூன்றாவது கட்டம்: மே 7
-- நான்காவது கட்டம்: மே 13
-- ஐந்தாவது கட்டம்: மே 20
-- ஆறாவது கட்டம்: மே 25
-- ஏழாவது கட்டம்: ஜூன் 1
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தேர்தல் விவரம்
-- வேட்பு மனுத் தாக்கல் ஆரம்பம்: மார்ச் 20
-- வேட்பு மனுத் தாக்கல் கடைசி நாள்: மார்ச் 27
-- வேட்பு மனு பரிசீலனை: மார்ச் 28
-- வேட்பு மனு திரும்ப பெறும் கடைசி நாள்: மார்ச் 30
-- வாக்குப்பதிவு: ஏப்ரல் 19
-- வாக்கு எண்ணிக்கை: ஜூன் 04
தமிழ்நாட்டில் நான்கு முனைப் போட்டி
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்காக திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), அகில இந்திய திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக), பாரதிய ஜனதா கட்சி (பாஜக), நாம் தமிழர் கட்சி (என்டிகே) என நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது.
மக்களவைத் தேர்தல் 2024 முழு விவரம்
இந்தமுறை நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். வரும் ஜூன் 4 ஆம் தேதி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
மக்களவைத் தேர்தல் 2019 எப்பொழுது நடந்தது?
கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. கடந்த முறை மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை பல கட்டமாக நடைபெற்றது. கடந்த மக்களவைத் தேர்தலில் 67.1% வாக்குகள் பதிவாகியிருந்தன. மக்களவைத் தேர்தல் முடிவுகள் மே 23 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ