கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு: 4 ஓய்வு பெற்ற நீதிபதிகள் நியமனம்!

கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடுகளை விசாரிக்க 4 ஓய்வு பெற்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்!!

Last Updated : Aug 3, 2018, 05:42 PM IST
கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு: 4 ஓய்வு பெற்ற நீதிபதிகள் நியமனம்!  title=

கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடுகளை விசாரிக்க 4 ஓய்வு பெற்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்!!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளி்ல் கடந்த மே மாதம் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் ஆளும்கட்சியினர் முறைகேடுகளில் ஈடுப்பதாக புகார்கள் தெரிவித்தனர். இந்நிலையில், தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடைவிதித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தேத்தல் நடத்தவும், தேர்தல் முடிவுகளை வெளியிடவும் தடைவிதித்தது. மேலும், இது குறித்த வழக்குகளை ஜூன் மாதம் விசாரித்து முடிக்கவும் உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. 

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு இது தொடர்பான வழக்குகளை விசாரித்தது. இதில் கூட்டுறவு சங்கங்களை நான்கு மண்டலங்களாக பிரித்து, கமிட்டி அமைத்து இதன் தலைவர்களாக ஓய்வு நீதிபதி, உறுப்பினர்களாக அந்தந்த மாவட்ட துணைபதிவாளர், ஆட்சியர் செயல்பட வேண்டும். மனுக்களை கமிட்டி ஆராயும். தேர்தல் சம்பந்தமான மனுக்கள் கோர்ட்டின் முதல் இருக்கைக்கு மாற்றப்படும், என தெரிவித்திருந்தது. 

இதையடுத்து, கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு தொடர்பான 431 புகார்களை விசாரிக்க 4 ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமித்துள்ளது உயர்நீதிமன்றம். வடக்கு மண்டல முறைகேடு புகார்களை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் விசாரிப்பார் எனவும் தெற்கு மண்டல முறைகேடு புகார்களை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதனை நியமித்துள்ளனர். 

மேலும், மேற்கு மண்டல முறைகேடு புகார்களை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய கிழக்கு மண்டல முறைகேடு புகார்களை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ராஜசூர்யா நியமனம்.

 

Trending News