ஆம்புலன்ஸில் அழகான ஆண் குழந்தை பிறப்பு

ஆம்புலன்ஸில் நிறைமாத கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 26, 2022, 10:48 AM IST
  • நேற்று நாள் இரவு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
  • தலைபிரசவத்திற்க்காக காத்திருந்தார்.
  • ஆம்புலன்ஸில் நிறைமாத கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை
ஆம்புலன்ஸில் அழகான ஆண் குழந்தை பிறப்பு title=

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியான கோதையார் வனப்பகுதி இருக்கிறது. இதன் அருகே கோலஞ்சிமடம் பகுதியியை சேர்ந்தவர் அபிஷா, இவருக்கு வயது 19 ஆகும். இவர் கர்ப்பமாகி தலைபிரசவத்திற்க்காக காத்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று நாள் இரவு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் பேச்சிப்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இரவு தகவல் கொடுத்து 108 ஆம்புலன்ஸ் விரைந்து சென்றனர். அங்கு அந்த பெண்மணியை அழைத்து வரும் வழியில் அந்தப் பெண்மணிக்கு யானைகள் நடமாடும் அடர்ந்த காட்டுப்பகுதியில் வைத்து பிரசவ வலி அதிகமானது. இதனால் ஓட்டுநர் ஆம்புலன்சை சாலை ஓரமாக நிறுத்தினார்.

மேலும் படிக்க | கடலூர்: செல்போன் மூலம் மருத்துவம் பார்த்ததால் குழந்தை இறந்ததாக புகார்

அவசரகால மருத்துவர் சுஜின் ராஜ் அந்தப் பெண்மணிக்கு யானைகள் நடமாட்டமுள்ள பகுதியில் அந்த இரவில் சாலையோரம் நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸிலேயே பிரசவம்பார்த்து மருத்துவ சிகிச்சை அளித்தார். இந்த சிகிச்சையில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தற்போது மருத்துவ சிகிச்சை அளித்து தாயும், சேயும்தற்போது பாதுகாப்பாக பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுனர்.

மேலும் படிக்க | கர்ப்பப்பையில் இருந்த 6 கிலோ கட்டி அகற்றம்... நேரில் சந்தித்து நிதியுதவி வழங்கிய அமைச்சர் 

தொடர்ந்து இந்த வனப் பகுதியில் சாலைகள் பல வருடங்களாக செப்பனிடமால் இருப்பதுடன்இந்த மலைவாழ் கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாததால்பல பிரசவங்கள்மிகுந்த சிரமப்பட்டு நடைபெறுவதாகவும், இதுபோன்று ஆம்புலன்ஸ்ஸிலேயே பிரசவம் பார்த்த நிகழ்வு இது இரண்டாவது முறை எனவும், இதனால் இந்தப் பகுதியில் ஒரு ஆரம்ப சுகாதார நிலைய அமைக்க்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க | அரசு மருத்துவமனையில் குடிபோதையில் இருந்த மருத்துவரால்  பரபரப்பு: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News