அரவக்குறிச்சி DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது ADMK புகார்!

அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது அதிமுக சார்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

Last Updated : May 19, 2019, 12:06 PM IST
அரவக்குறிச்சி DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது ADMK புகார்! title=

அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது அதிமுக சார்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று(மே 19) இடைத்தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், விவிபேட் மற்றும் இ.வி.எம் மெஷின் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் காலை முதலே ஒரே பரபரப்பாக இருந்து வருகிறது. தொடர்ந்து செந்தில் பாலாஜி, தோட்டக்குறிச்சி, வேலாயுதம்பாளையம் பகுதிகளில் வாக்காளர்களை அடைத்து வைத்து, வாக்களிக்க விடாமல் தடுத்து வருவதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் அதிமுக சார்பில் வழக்கறிஞர் பாபு முருகவேல் என்பவர் புகார் அளித்துள்ளார். 

அதேபோன்று ஆளும் கட்சிக்கு ஆதரவாக காவல்துறை செயல்படுகிறது என திமுக சார்பிலும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

 

Trending News