இடைத்தேர்தலை சந்திக்க அதிமுக-விற்கு தைரியம் இல்லை என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியதாவது...
"பல்கலைக் கழகங்களில் நடைபெறும் ஊழல்கள் குறித்து ஆளுநர் பேசியிருப்பது வேதனை அளிக்கிறது. ஊழல் குறித்து வெளியிட்டுள்ள ஆளுயர் நடவடிக்கை எடுக்காதது வேடிக்கையாக உள்ளது.
Tamil Nadu Governor's statement with regard to corruption prevalent in appointing Vice Chancellors is a big joke. It shows that TN Governor has not taken any action. We have sought time to meet him: DMK President MK Stalin pic.twitter.com/s2NUFoMFqW
— ANI (@ANI) October 8, 2018
பல்கலைக்கழகங்களில் மட்டுமல்ல அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடக்கிறது. பல்கலை கழக முறைகேடு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆளுநரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது. ஊழல் குறித்து ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம்; நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்" என தெரிவித்தார்.
TN Chief Secy is conducting herself as the propaganda secretary of the ruling AIADMK govt. This is proved with the representation which she has submitted to the Election Commission in this regard: DMK President MK Stalin on the issue of by-poll in 2 TN assembly constituencies pic.twitter.com/l2gk3dV87y
— ANI (@ANI) October 8, 2018
மேலும் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தைரியம் இல்லாமல், அதிமுக அரசு தலைமைச் செயலாளரை வைத்து தேர்தலை தள்ளி வைத்துள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிட்டால் மக்களால் விரட்டியடிக்கப்படுவோம் என்கிற அச்சத்தில் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது. இந்த செயல்பாடு மூலம் ஆளுங்கட்சியின் ஊதுகுழல்களாக இருவரும் செயல்பட்டிருப்பது நிரூபணமாகி உள்ளது. எனவும் குறிப்பிட்டுள்ளார்.