எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கு பெரும் சறுக்கலாக, சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், இன்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. அதிமுக-வில் ஜூன் 23 ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்கும் என தெரிவித்த உயர்நீதிமன்றம், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலராக தேர்வு செய்தது செல்லாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது தவிர, தனி கூட்டம் எதுவும் கூட்டம் கூட்டக் கூடாது என்றும் பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.
கடந்த ஜூலை 7 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. இதனால் எடப்பாடி பழனிச்சாமிக்கும் அவரது தரப்பில் உள்ள அனைவருக்கும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
தீர்ப்பினால் மகிழ்ந்த புகழேந்தி ஒபிஎஸ் க்கு இனிப்பு கொடுத்து வாழ்த்து கூறினார்.
மேலும் படிக்க | முதல்வர் ஸ்டாலினின் டெல்லி பயணம் பற்றிய முழு விவரம்!
இதற்கிடையில், “ஓபிஎஸ் - க்கு ஆதரவு நிலை என்பது கிடையாது. 90 சதவீத கட்சியினர் ஒற்றைத் தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளனர். தீர்ப்பு நகல் வந்தபின் சட்ட வல்லுநர்களோடு ஆலோசித்து அடுத்தகட்டம், மேல்முறையீடு குறித்தெல்லாம் கட்சிதான் முடிவு செய்யும்” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். முன்னதாக, கடந்த 11/7/2022 அன்று நடந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொது குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தாக்கல் செய்த உரிமையியல் வழக்கு இன்று தீர்ப்புக்காக பட்டியலிடப்பட்டது.
கடந்த வாரம் இரு தினங்களாக நடந்த வாத பிரதிவாதங்களின் அடிப்படையில் 23 6 2022 நடந்த பொது குழுவிற்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி எந்தவிதமான தடையும் இல்லை என்றும் 11.7.2022 அன்று நடந்த பொதுக்குழு செல்லாது என்றும் மூன்றில் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் விருப்பப்பட்டால் பொதுக்குழு நடத்த வேண்டும் என்றும் ஓபிஎஸ் அதில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் நீதிமன்றம் ஆணையாளரை நியமித்து பொதுக்குழுவை நடத்த உத்தரவிடும் என்றும் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ