ஒற்றைத் தலைமை என இபிஎஸ் கூற, இரட்டைத் தலைமை என ஓபிஎஸ் கூற கொந்தளிப்பான சூழலில் அதிமுக பொதுக்குழு வானகரத்தில் இன்று கூடியிருக்கிறது. இபிஎஸ் மூவ்களை தடுக்க முடியாமல் நீதிமன்றத்திற்கு சென்ற ஓபிஎஸ்ஸுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக தீர்ப்பு வந்திருக்கிறது.
நேற்று நள்ளிரவு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், “23 தீர்மானங்களைத் தவிர எந்த புதிய தீர்மானத்தையும் நிறைவேற்றக்கூடாது. எந்தவித புதிய முடிவையும் எடுக்கக்கூடாது” என குறிப்பிட்டிருந்தது.
இதனால் பொதுச்செயலாளர் கனவில் இருந்த இபிஎஸ்ஸுக்கு அதிர்ச்சியும், ஒருவழியாக இபிஎஸ் கனவுக்கு கடிவாளம் போட்டுவிட்டோம் என்று ஓபிஎஸ்ஸுக்கு மகிழ்ச்சியும் கிடைத்திருக்கிறது.
இந்தச் சூழலில் வானகரத்தில் இருக்கும் ஸ்ரீவாரு மண்டபத்துக்கு பரப்புரை வாகனத்தில் ஓபிஎஸ் வந்தார். அவர் வருகை தந்தபோது ஒற்றைத் தலைமை வேண்டும் என்று இபிஎஸ் தரப்பினர் கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் படிக்க | EPS vs OPS : “துரோகியே வெளியே போ” - OPS-க்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக தொண்டர்கள்
மேலும் அவர் மண்டபத்துக்குள் நுழைந்தபோது துரோகி ஓ. பன்னீர்செல்வம் வெளியே போங்க என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு கூட்டத்துக்கு வருகை தந்தபோது வேண்டாம் வேண்டாம் இரட்டைத் தலைமை வேண்டாம் என்று கோஷம் எழுப்பப்பட்டது.
நிலைமை இப்படி இருக்க இபிஎஸ்ஸும், ஓபிஎஸ்ஸும் பொதுக்குழு மேடையில் ஏறி எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனையடுத்து ஒரே மேடையில் இருவரும் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு நடுவே தற்காலிக அவைத்தலைவர் தமிழ் உசேன் அமர்ந்திருந்தார்.
மேலும் படிக்க | கடைசி நேரத்தில் மாறிய காட்சிகள்... அதிமுக பொதுக்குழுவில் என்ன நடக்கப்போகிறது?
அப்போது தீர்மானங்கள் உறுப்பினர்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது என முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கூறினார். அந்த சமயத்தில் மேடைக்கு வந்து மைக் பிடித்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், “அனைத்துவகை தீர்மானங்களையும் இந்தப் பொதுக்குழு நிராகரிக்கிறது” என்று ஆவேசமாக பேசினார். திடீரென அவர் அப்படி பேசியது அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சியையும்பரபரப்பையும் ஏற்படுத்தியது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR