செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரலாம்... காரணத்தை சொல்லி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

Minister Senthil Balaji: செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர எந்த தடையும் இல்லை என கூறி அவரை அமைச்சரவையில் நீக்க கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Jan 5, 2024, 01:35 PM IST
  • மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை
  • ஒரு அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை - உச்ச நீதிமன்றம்
  • செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர எந்த தடையும் இல்லை - உச்ச நீதிமன்றம்
செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரலாம்... காரணத்தை சொல்லி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! title=

Minister Senthil Balaji: சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் எஸ்.ராமச்சந்திரன், அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அதேபோல செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நியமித்த உத்தரவை எதிர்த்தும், அவரை பதவி நீக்கம் செய்த உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்ததை எதிர்த்தும் வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவரும் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதில் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் நீடிக்க வேண்டுமா என்பது குறித்து முதல்வர் தான் முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தி, அனைத்து வழக்குகளையும் முடித்துவைத்து உத்தரவிட்டு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் தீர்ப்பளித்தனர். 

இதை தொடர்ந்து, வழக்கறிஞர் எம். எல். ரவி, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நியமித்த உத்தரவை எதிர்த்தும், அவரை பதவி நீக்கம் செய்த உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்ததை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ். ஒகா, உஜ்ஜல்புயல் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரணை மேற்கொண்டது. 

மேலும் படிக்க | பாஜகவுக்கு எதிராக மதுரையில் கூட்டம் - எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு..!

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர எந்த தடையும் இல்லை என கூறி அவரை அமைச்சரவையில் நீக்க கோரிய மனுவை ரத்து செய்தனர். ஒரு அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை எனவும் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர எந்த தடையும் இல்லை எனவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். 

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, குற்றவியல் வழக்கு நிலுவையில் உள்ள ஒரு நபர் அமைச்சர் பதவியை வகிக்க தடை ஏதும் இல்லை. ஆனால், அப்படி அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

முன்னதாக, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர், முதல்வர் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாகவும், அதனடிப்படையில் மனுதாரர்கள் கொண்டுள்ள கவலை நியாயமானதுதான் என குறிப்பிட்டுள்ளனர். 

மேலும், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது அரசியலமைப்பு நெறிமுறைகளுக்கு எதிரானது மட்டும் அல்லாமல், தார்மீக அடிப்படையில் சரியானதல்ல என்றும் குறிப்பிட்டிருந்தனர். மேலும் அவர் இலாகா இல்லாத அமைச்சராக இருப்பதால் எந்த பலனும் இல்லை என குறிப்பிட்டிருந்த நீதிபதிகள், இந்த வழக்குகளில் எந்த உத்தரவு பிறப்பிக்க இயலாது என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | அடித்தது ஜாக்பாட்... பொங்கல் பரிசுடன் ரொக்கமும்... உரிமைத் தொகையிலும் சர்பரைஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News