சசிகலாவிற்கு ஆறு நாள்களுக்கு பிறகு ரத்த அழுத்தம் மீண்டும் அதிகரித்துள்ளதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது..!
அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (AIADMK) தலைவர் வி.கே.சசிகலாவுக்கு ஆறு நாள்களுக்கு பிறகு ரத்த அழுத்தம் மீண்டும் அதிகரித்துள்ளதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் (BMCRI) தெரிவித்துள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவுக்கு (Sasikala) உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் பெங்களூருவில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் (Victoria Govt Hospital) அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே 4 ஆண்டுகள் சிறை தண்டனை நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார். ஆனாலும் அவர் தொடர்ந்து அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம்., சசிகலாவுக்கு 6 நாட்களுக்கு பிறகு திடீரென்று ரத்த அழுத்தம் (Blood pressure) அதிகரித்து உள்ளது. இதனால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவரது உடலில் சர்க்கரை அளவும் 278 ஆக உயர்ந்து உள்ளது.
ALSO READ | சுவரொட்டி மூலம் சசிகலாவை வரவேற்ற அதிமுக தொண்டன் நீக்கம்
இது குறித்து விக்டோரியா மருத்துவமனை (Victoria Hospital) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., "சசிகலாவிற்கு ஆறு நாள்களுக்கு பிறகு ரத்த அழுத்தம் மீண்டும் அதிகரித்துள்ளதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விக்டோரியா மருத்துவமனை தரப்பில் மேலும் தெரிவிக்கையில், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 278 ஆக இருப்பதால் அவருக்கு இன்சுலின் மருந்து செலுத்தப்படுகிறது. சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது. சிகிச்சைக்கு அவர் ஒத்துழைக்கிறார்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே விக்டோரியா அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவரும் நிலையில், 4 ஆண்டுகால சிறைத்தண்டனை முடிந்துவிட்டதால், புதன்கிழமை காலை 11 மணிக்கு மத்திய சிறை காவல் கண்காணிப்பாளர் சேஷமூர்த்தி, துணை காவல் கண்காணிப்பாளர் லதா இருவரும் மருத்துவமனைக்குச் சென்று சசிகலாவை விடுதலை செய்துவிட்டதாக அறிவித்தனர்.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR