கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அசோக்குமார், 794 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை செல்லாது என அறிவிக்கக் கோரி அத்தொகுதி திமுக வேட்பாளர் செங்குட்டுவன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தும், அரசு இயந்திரத்தை தனது பிரச்சாரத்துக்கு பயன்படுத்தியும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
மேலும், வேட்புமனுவில் சொத்துக்கள் குறித்த விவரங்களை மறைத்ததாகவும், தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள வரம்பை மீறி செலவிட்டுள்ளதாகவும், தபால் வாக்குகள் காரணமின்றி நிராகரிக்கப்பட்ட்டுள்ளதாகவும் வாக்கு எண்ணிக்கை முறையாக நடக்கவில்லை எனவும் கூறப்பட்டிருந்தது. இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக எம்.எல்.ஏ. அசோக்குமார் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், தேர்தல் வழக்கில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார்.
அப்போது திமுக வேட்பாளர் செங்குட்டுவன் தரப்பில், உரிய ஆதாரங்களுடன் தொடரப்பட்டுள்ள தேர்தல் வழக்கை நிராகரிக்க கூடாது எனவும், விசாரணையின் போது தான் இந்த ஆதாரங்களை நிரூபிக்க முடியும் என வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, தேர்தல் வழக்கை விசாரிக்க போதுமான அதாரங்கள் உள்ளதாக கூறி, செங்குட்டுவன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய அதிமுக எம்.எல்.ஏ. அசோக்குமாரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும் படிக்க | முகாந்திரம் இல்லை - ஆ.ராசா மீதான வழக்கு தள்ளுபடி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ