Tamil Nadu weatherman update : வங்க கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் போக்கு மாறத் தொடங்கியிருப்பதால் கனமழை பயத்தில் இருந்த சென்னை மக்கள் நிம்மதியடையலாம். கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 300 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் 30 சென்டி மீட்டர் பதிவாகியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் அரசின் நிவாரண முகாம்களில் தக்க வைக்கப்பட்டனர். இன்னும் சிலர் தங்களின் உறவினர்களின் வீடுகளுக்கு முன்கூட்டியே இடம்பெயர்ந்தனர். அடுத்த சில நாட்களுக்கு கனமழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதால் அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது.
சென்னை கனமழை லேட்டஸ்ட் அப்டேட்
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை இருக்கும் என தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது. இந்த சூழலில் வங்க கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் லேட்டஸ்ட் தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி, காற்றழுத்த தாழ்வு நிலை சென்னையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், காற்று கடக்கும் பகுதிக்கு வடக்கே இருக்கும் என்பதால் சென்னை மக்கள் சற்று இளைப்பாறலாம். முக்கிய காற்றழுத்த தாழ்வுநிலையில் இருந்து இன்று பெய்த கனமழை நமக்கு நடக்கப்போவதில்லை. சாதாரண மழை பெய்யலாம். மழையின்போக்கு தெற்கு ஆந்திராவுக்கு மாறிவிட்டது.
தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட் என்ன?
சென்னையில் 18-20 தேதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலத்தில் நகரும் போது, சாதாரணமாக சமாளிக்கக்கூடிய மழையாக இருக்கும். எனவே மேம்பாலங்களில் நிறுத்தப்பட்ட வாகனத்தை வீட்டிற்கு கொண்டு வரலாம்.சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களில் சென்னையில் சில இடங்களில் 300 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என வெதர்மேன் தெரிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு கனமழை குறித்து பயத்தில் இருந்த சென்னை மக்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது.
தமிழ்நாடு கனமழை லேட்டஸ்ட் அப்டேட்
தமிழ்நாடு கனமழை முன்னெச்சரிக்கையாக சென்னை - திருப்பதி பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பதி செல்லும் சப்தகிரி ரயில் சேவையும் ரத்து என அறிவித்துள்ள தெற்கு ரயில்வே, ஈரோடு - சென்னை ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் இன்று ஒருநாள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மழை முன்னெச்சரிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கும், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிகப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | விடுமுறை! மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கவலைப்பட வேண்டாம் -தமிழக அரசு
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ