புரட்டாசி விரதம் தமிழ்நாட்டில் பெரும்பாலானோர் கடைபிடிப்பது வழக்கம். இந்த மாதத்தில் முழுமையாக அசைவம் தவிர்த்து, சைவம் மட்டுமே சாப்பிடுவார்கள். இந்த சூழலில் இந்த ஆண்டு புரட்டாசி மாதம் தொடங்க இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. அதாவது, வருகின்ற 17 ஆம் தேதி புரட்டாசி மாதம் துவங்க உள்ளது. இதனால், ஒரு மாத காலம் மீன் மற்றும் இறைச்சிகளை சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்பதால் இன்று இறைச்சிக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக சென்னை காசிமேடு மீன் மார்க்கெட்டில் அதிகாலையில் ஆயிரக்கணக்கானோர் மக்கள் மீன் வாங்க குவிந்ததனர்.
திரும்பிய பக்கமெல்லாம் மக்களின் கூட்டமாகவே இருந்தது. இதனையொட்டி காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இன்று ஏராளமான விசைப் படகுகளில், சைபர் படகுகளில் மீன்கள் குவியல் குவியலாக வந்திறங்கின. மீனவர்கள் அதிகாலை முதலே கரை திரும்பி பல்வேறு வகையான மீன்களை விற்பனைக்கு கொடுத்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விசைப்படகுகள் மூலம் நீண்ட தூரம் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்த மீனவர்களும் கரை திரும்பினர். அவர்கள் பெரிய வகை மீன்கள் மற்றும் சிறிய வகை மீன்களை கொண்டு வந்ததால் காசிமேடு மீன் மார்க்கெட்டில் வகைவகையான மீன்கள் இருந்தன.
மேலும் படிக்க | திருமாவளவன் பின்வாங்காமல் இருக்க வேண்டும் - சீமான் பேட்டி!
மீன் பிரியர்கள் முதல் மொத்த வியாபாரிகள், சில்லறை விற்பனையாளர்கள் வரை அந்த மீன்களை வாங்க முட்டிமோதினர். இந்த வாரம் வஞ்சிரம், வவ்வால், பால் சுறா, திருக்கை, பாறை, ஷீலா, சங்கரா, உள்ளிட்ட பெரிய வகை மீன்களின் வரத்து எதிர்பார்த்தைபோலவே அதிகமாகவே காணப்பட்டது. இதனால் மொத்த விற்பனையாளர்களும், சில்லறை விற்பனையாளர்களும் ஏல முறையில் தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கி சென்றனர். சில்லறை விற்பனை செய்யும் கடைகளும் இந்த வாரம் மீன்பிடித் துறைமுகத்தில் அதிகமாகவே காணப்பட்ட நிலையில் மீன் பிரியர்கள் தங்களுக்கு தேவையான பெரிய வகை மற்றும் சிறிய வகை மீன்களை வாங்கிச் சென்றனர்.
மீன்களின் விலைப் பட்டியல்
வஞ்சிரம் -1000, கொடுவா - 900, ஷீலா - 500, பால் சுறா -500, சங்கரா - 600, பாறை - 600, இறால் - 400, நண்டு -300, நவரை -300, பண்ணா-300, காணங்கத்தை -300, கடுமா- 200, நெத்திலி,-100 என்ற விலைகளுக்கு விற்பனையாகின.
மேலும் படிக்க | சென்னை திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன குட்நியூஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ