முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் துவங்கியது!
ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிப்பது குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் அதுதொடர்பாக தமிழக அரசு என்ன முடிவு எடுக்கும் என எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
இந்நிலையில் தற்போது சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறகின்றது.
அக்கூட்டத்தில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கு பரிந்துரைப்பது குறித்து முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், பல்வேறு முக்கிய முடிவுகளும் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளது.
மேலும் தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற செயலிகளை பள்ளிகளில் பயன்படுத்த தடை விதிப்பது குறித்தும், QR குறியீடு மூலம் பாடம் நடத்த ஏதுவான நடவடிக்கை என பல முக்கிய அம்சங்களை புகுத்துவதற்கான ஆலோசனை இக்கூட்டத்தில் நடைப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.