தமிழக ஆளுநர் முதல்வர் சந்திப்பு : காரணம் என்ன?

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் சந்தித்து இருக்கிறார். அவருடன் மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு ஆகியோர் உள்ளனர்.

Written by - அதிரா ஆனந்த் | Last Updated : Jun 2, 2022, 06:15 PM IST
  • ஆளுநர் முதலமைச்சர் சந்திப்பு
  • ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது
  • அமைச்சரவை மாற்றம் இருக்குமா?
தமிழக ஆளுநர் முதல்வர் சந்திப்பு : காரணம் என்ன? title=

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆளுநர் மாளிகையில் சந்தித்து பேசினார். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வு விலக்கு கோரும் சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தமைக்கு ஆளுநருக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்தார். அதே சமயம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 21 சட்டமுன்வடிவுகளுக்கு விரைந்து ஒப்புதல் தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | மாநில கல்விக் கொள்கை: குழு அமைத்தது தமிழக அரசு!

அரசியல் சாசனத்தின் உணர்வையும் தமிழக மக்களின் விருப்பத்தையும் நிலைநிறுத்திடுமாறு ஆளுநரிடம் முதலமைச்சர் முக ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த சந்திப்பின்போது மூத்த அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன், தங்கம் தென்னரசு ஆகியோர் உடன் இருந்தனர்.

cm meets governor

சமீபத்தில் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக நீண்ட நாட்களாக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்தததற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும் உச்சநீதிமன்றமே பேரறிவாளனை விடுவித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில்தான் ஆளுநரை முதலமைச்சர் சந்தித்திருக்கிறார்.

மேலும் படிக்க | ‘என்ன இருந்தாலும் நானும் டெல்டாக்காரன் தான்.!’ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News