மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
மீன்பிடி (Fisherman) தடைக்காலத்தின் போது மீன்பிடி விசைப்படகுகள்/ இழுவைப்படகுகளில் மீன்பிடிப்பு செய்யும் பணியாளர்கள் மற்றும் முழுநேர மீன்பிடிப்பினை சார்ந்த மீனவ குடும்பங்கள் முற்றிலுமாக தொழிலின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் மீனவர்கள் தங்களது குடும்பத்தினை சிரமமின்றி நடத்திச் செல்ல 2008 ஆம் ஆண்டு முதல் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படுகிறது.
ALSO READ | கொரோனா இல்லை என்று சொல்லும் நாளே எனக்கு மகிழ்ச்சியான நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வரின் (TN CM MK Stalin) உத்தரவின்படி நடப்பாண்டிற்கு 1.72 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை தலா ரூ.5,000 வீதம் வழங்கிடும் பொருட்டு, ரூ.86 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த நிவாரணத் தொகையானது மீனவர்களின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்கப்படும் என மீன்வரத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR