கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று செல்வதாக இருந்தது தள்ளிவைக்கப்பட்டுள்ளது!
முன்னதாக நேற்று சேலம் மாவட்டம் வனவாசியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், புயல் கரையை கடந்த அன்று பாதிக்கப்பட்ட இடங்களில், அதிகாலை 4 மணிக்கே நிவாரணப் பணிகள் தொடங்கப்பட்டன, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் இவ்வளவு விரைவாக தொடங்கியது வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை எனுவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மேலும் 5 அமைச்சர்கள் சென்றுள்ளதாகவும், துணை முதல்வர் பன்னீர்செல்வம் சென்று நிவாரணப் பணிகளை முடுக்கிவிட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் புயல் பாதித்த பகுதிகளை இன்று முதல்வர் பார்வையிடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓரிரு நாட்களுக்கு பின்னர் அவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்டா மாவட்டங்களில் முழு வீச்சில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனினும், ஆங்காங்கே போக்குவரத்து சீரடையாமல் இருப்பதால் அவர் தனது பயணத்தினை ஒத்திவைத்திருப்பதாக தெரிகிறது.