உதயமானது தமிழகத்தின் தமிழகத்தின் 33வது மாவட்டமான தென்காசி

புதிதாக உதயமான தென்காசி மாவட்டத்தின் துவக்க விழாவை தமிழக முதலவர் துவக்கி வைத்தார்!

Last Updated : Nov 22, 2019, 11:24 AM IST
உதயமானது தமிழகத்தின்  தமிழகத்தின் 33வது மாவட்டமான தென்காசி title=

புதிதாக உதயமான தென்காசி மாவட்டத்தின் துவக்க விழாவை தமிழக முதலவர் துவக்கி வைத்தார்!

தமிழகத்தின் புதிய மாவட்டமாக தென்காசி இன்று உதயமாகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தென்காசி மாவட்டத்தை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டத்தைப் பிரித்து தென்காசியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாவட்ட தொடக்க விழா தென்காசி இசக்கிமகால் வளாகத்தில் காலை 9.15 மணிக்கு நடைபெறுகிறது. மாவட்டத்தை தொடங்கி வைத்து, 5 ஆயிரம் பயனாளிகளுக்கு 100 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார். நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர். விழாவையொட்டி நெல்லை, குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டக்ஙளில் இருந்து 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

தென்காசி மாவட்டத்தின் சிறப்பு: தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயம், குற்றாலம் குற்றாலநாதர் ஆலயம் ,இலஞ்சி குமரன் ஆலயம், புளியரை தஷ்ணாமூர்த்தி ஆலயம், பண்பொழி திருமலை முருகன் ஆலயம், இலத்தூர் சனி பகவான் ஆலயம்,சங்கரன்கோவில் சங்கர நயினார் கோவில் ஆலயம் ஆகியவற்றுடன் பொட்டல்புதூர் பள்ளிவாசல், புனித மிக்கேல் அதிதூதர் சின்னப்பர் ஆலையம் ஆகியவை இந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது. 

பூலித்தேவன், வீர வாஞ்சிநாதன் போன்ற வரலாற்றில் இடம்பிடித்த பலரை அளித்ததும் இதே தென்காசி மாவட்டம்தான். தமிழக-கேரள மாநிலத்தின் எல்லைப் பகுதியாக செங்கோட்டை புளியரை அருகில் உள்ள கோட்டை வாசல் விளங்குகிறது. பெரிய அளவில் தொழிற்சாலைகள் இல்லாவிட்டாலும் விவசாயம் செழித்து காணப்படுகிறது. 

 

Trending News