கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் அசோக் குமார், அங்குள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படிப்பையும், அமெரிக்காவின் கென்டக்கியில் அமைந்துள்ள எம்.எஸ். லூயிஸ்வில்லி பல்கலைக்கழகத்தில் எம்.எஸும், அமெரிக்காவில் உள்ள இண்டியானாபோலிஸ் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ., பட்டம் பெற்றுள்ளார். படித்து முடித்ததும் அமெரிக்காவில் உள்ள மைக்ரோசாஃப்ட், இன்டெல் கார்ப்பரேஷன், ஜெராக்ஸ் கார்ப்பரேஷன் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். என்ன தான் வெளிநாட்டில் லட்சங்களில் சம்பளம் பெற்றாலும், பிறந்த தாய் நாட்டிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தார்.
இந்தியா திரும்பியதும் 2004ம் ஆண்டு கோவையில், ‘அமெக்ஸ் அலாய்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்நிறுவனம் காஸ்ட் அயர்ன் உற்பத்தி செய்து வருகிறது. இதன் மூலம் ஏராளமான இளம் தலைமுறையினர் வேலை வாய்ப்பு பெற்றுள்ள நிலையில், அசோக்குமாரின் கவனம் கல்வி பக்கம் திரும்பியது. முதன் முறையாக 2006ம் ஆண்டு உலகத்தரம் வாய்ந்த பாடத்திட்டத்துடன் ‘இந்தியன் பப்ளிக் பள்ளி’ நிறுவினார். அதன் பின்னர் மாணவர்களுக்கு தொழில் ரீதியாக பயிற்சி அளிக்கக்கூடிய ‘தி டிப்ஸ் குளோபல் இன்ஸ்டிடியூட்’ என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
சுற்றுச்சூழலுக்கு தீங்கில்லாத, கலாச்சாரத்தை சீர்குலைக்காத, அழகியல் ஆய்வுகளை அடிப்படையாக கொண்ட கட்டிடக்கலையை மாணவர்களுக்கு போதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், 2018ம் ஆண்டு ‘டிப்ஸ் ஸ்கூல் ஆஃப் ஆர்கிடெக்சர்’ என்ற கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு தொடர்பான கல்வி நிறுவனத்தை தொடங்கினார். ‘டிப்ஸ் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்’ ஏஐசிடிஇ, புது தில்லி, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்த கல்லூரி மூலமாக, தலைசிறந்த நிறுவனங்களுக்கான தலைமை அதிகாரிகளை உருவாகக்கூடிய 2 ஆண்டு எம்பிஏ பட்டப்படிப்பு கற்பிக்கப்படுகிறது. இவரது கல்வி குழுமத்தின் கீழ் கோவையில் டிப்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்றும் செயல்பட்டு வருகிறது.
அசோக்குமார் ஆற்றல் பவுண்டேஷன் என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளை மூலமாக கிராமப்புற மாணவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து நிறைந்த உணவு வழங்குதல், பராமரிப்பற்ற மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகளை புனரமைத்தல், படித்து முடித்த கிராமப்புற மாணவர்கள், இளைஞர்கள் புதிய தொழில் தொடங்குவதற்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குதல் போன்ற பல விஷயங்களை செய்து வருகிறார். ஆதரவற்ற மக்களுக்கு உணவளிப்பது, கொங்கு மண்டலம் முழுவதும் இலவச மருத்துவ முகாம்களை அமைப்பது என பல சமூக சேவைகளை தனது ஆற்றல் அறக்கட்டளை மூலம் நடத்தி வருகிறார். அசோக்குமாரின் சேவை மனப்பான்மையை பாராட்டி பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
2020ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் இந்தியா ஆற்றல் அசோக்குமாருக்கு “High Performing Human Asset” என்ற விருதினை வழங்கியுள்ளது. பள்ளி முதல் கல்லூரி வரை பல கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் அசோக்குமாருக்கு ‘எட்ப்ரீனர்’ என்ற விருதினை 2020ம் ஆண்டு டெல்லியில் உள்ள கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் வழங்கியுள்ளது. இதே அமைப்பு 2021ம் ஆண்டு ‘தொலைநோக்கு தலைவர்’ என்ற விருதினையும் ஆற்றல் அசோக்குமாருக்கு வழங்கி கெளரவித்துள்ளது. இந்திய சாதனையாளர் மன்றத்தால் 2021 ஆம் ஆண்டுக்கான ‘இந்திய சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபவுண்டரிமேன் அமைப்பு 2006 ஆம் ஆண்டுக்கான "சிறந்த ஃபவுண்டரி" விருதினை வழங்கியுள்ளது. 2020-21 ம் ஆண்டிற்கான மிகவும் செல்வாக்கு மிக்க இளம் தலைவர்கள் பட்டியலில், ஆற்றல் அசோக்குமார் இடம் பிடித்துள்ளார்.
கிராமப்புறக் கல்வி மேம்பாட்டில் சிறந்த சேவையாற்றியதற்காக ஆற்றல் பவுண்டேஷனுக்கு 2021ம் ஆண்டு விகடனின் ‘பினாக்கிள் விருது’ மற்றும் ‘டைம்ஸ் எஜுகேஷன் ஐகான்ஸ் 2021-22’ விருதும் வழங்கப்பட்டுள்ளது. 2017, 2018, 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் TIMES குழுவின் சிறந்த சர்வதேச பள்ளிக்கான விருதுகளை தொடர்ந்து 5 முறை இந்தியன் பப்ளிக் ஸ்கூல் பெற்றுள்ளது.
மேலும் படிக்க | சொத்து விவரங்களை வெளியிட திமுக தலைவர்கள் தயாரா?... அண்ணாமலை கேள்வி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ