மதுரை: ஆகஸ்ட் 10 ஆம் தேதி நிலவரப்படி கோவிட் காரணமாக மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 6 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐ.எம்.ஏ - Indian Medical Association) மதுரை கிளை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
ஐ.எம்.ஏ இன் மதுரை (Madurai) கிளையின் தலைவர் டாக்டர் வி.என்.அழகவெங்கடேசன் (Alagavenkatesan) கூறுகையில், ஊரடங்கு காலத்திலிருந்து ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை இறந்த 11 மருத்துவர்களில் கோவிட் -19 காரணமாக இரண்டு மருத்துவர்கள் இறந்துள்ளனர் என அவர்களின் குடும்பத்தார் சமர்பித்த ஆவணங்கள் மூலம் கண்டறியப்பட்டது.
ALSO READ | Coronavirus News: தமிழகத்தில்இன்றைய நிலவரம் என்ன? பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் பாதிப்பு
கடந்த மூன்று நாட்களில், இறந்த மருத்துவர்களின் இன்னும் சில குடும்பங்கள் ஆவணங்களை சமர்ப்பிக்க முன்வந்தன. ஆவணங்களை ஆராய்ந்த பின்னர், மாவட்டத்தைச் சேர்ந்த 6 மருத்துவர்கள் (Doctors) இதுவரை COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கண்டறியப்பட்டது.
மற்ற காரணங்களால் மூன்று மருத்துவர்கள் இறந்தனர். மேலும் இறந்த இரண்டு மருத்துவர்களின் குடும்பங்கள் எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க முன்வரவில்லை என்று டாக்டர் அழகவெங்கடேசன் கூறினார்.
ALSO READ | காலனாய் மாறிய Mobile Phone Charger: கரூரில் நடந்த பரிதாபம்!!
இறந்த மருத்துவர்கள் டாக்டர் ஆர்.ராமச்சந்திரன், டாக்டர் டி ஆர் தியானேஷ், டாக்டர் கே கோவிந்தராஜன், டாக்டர் டபிள்யூ எட்வின் சவாரிராய், டாக்டர் வி முருகேசன் மற்றும் டாக்டர் எஸ் ஆர் லட்சுமி காந்தம் என அடையாளம் காணப்பட்டனர்.