தமிழகத்தில் ஜல்லிக்கட்டு எப்படியோ அப்படிதான் கபடி விளையாட்டும். ஜல்லிக்கட்டில் காளைகளுடன் மல்லுக்கட்டும் வீரர்கள்போல், கபடியில் வீரர்களே ஜல்லிக்கட்டு காளைகளாக மல்லுக்கட்டிக்கொள்வார்கள். இதற்காக உயிரை கொடுத்து விளையாடுவோம் எனக்கூறும் அளவுக்கு அந்த விளையாட்டின் மேல் அதீத ஈர்ப்பு கொண்டவர்கள் தமிழக கபடி வீரர்கள். ஆனால் அந்த வார்த்தை இன்று நிஜமாகியுள்ளது. வெண்ணிலா கபடி குழு படத்தில் கதாநாயகனாக வரும் விஷ்னு விஷால் களத்தில் விளையாடிக்கொண்டு இருக்கும்போதே உயிரிழந்துவிடுவார். அதேபோல் நிஜத்தில் ஒரு சம்பவம் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அரங்கேறியுள்ளது.
அங்குள்ள மணாடிகுப்பம் பகுதியில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் புரங்கணி கிராமத்தை சேர்ந்த முரட்டுகாளை அணி பங்கேற்றுள்ளது. இந்த அணியை சேர்ந்தவர்தான் கபடி வீரர் விமல். சிறந்த கபடி வீரரான இவர் பல போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும் அள்ளிக்குவித்துள்ளார். இந்நிலையில் மாநில அளவிலான இந்த போட்டியிலும் வெற்றி வாகை சூட வேண்டும் என்ற நோக்கத்தோடு களத்தில் இறங்கியுள்ளார் விமல்.
மேலும் படிக்க | IND vs WI முதல் போட்டியிலேயே திக் திக்! 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!
எதிர் அணி வீரர்களை தொட்டு விட்டு மூச்சு விடாமல் கபடி மந்திரத்தை முனகிய அவர் அந்த விளையாட்டு மைதான மண் தரையிலேயே மயங்கியுள்ளார். இதை பார்த்த சக வீரர்கள் விமலின் அருகே வந்து அவரை எழுப்ப முயற்சித்துள்ளனர். ஆனால் மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்த விமல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சக மற்றும் எதிர் அணி வீரர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் : வெண்ணிலா கபடி குழு பட பாணியில் களத்திலேயே உயிர்விட்ட வீரர்., வைரலாகும் வீடியோ காட்சி.!#Kabbadi #sports #RIPVimal #TNPlayer pic.twitter.com/oDfxLuafiF
— Dayana Roselin (@Dayananithvin) July 25, 2022
மேலும், இந்த விளையாட்டு போட்டியின்போது பிற வீரர்கள் அதை தங்கள் செல் ஃபோனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோவில் விமல் அடிபட்டு சுருண்டு விழுந்து உயிரிழக்கும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகியுள்ள நிலையில் அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விளையாட்டு வீரர்கள் விலை மதிப்பற்றவர்கள், அவர்கள் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையில் விளையாட வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாகவும் உள்ளது.
மேலும் படிக்க | ஹீரோவான அக்சர் படேல்! புதிய சாதனை படைத்த இந்திய அணி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ