உள்ளாட்சியில் 50% இடங்களை கூட கேட்போம்... பிரேமலதா அதிரடி!

விஜயகாந்த் குறித்து பேசிய பாஸ்கரன், அமைச்சராக இருக்கிறாரா என்பதே எனக்கு தெரியாது என அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். இது கூட்டணிக்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : Nov 24, 2019, 05:20 PM IST
  • உள்ளாட்சியில் மேயர் உட்பட தலைவர் பதவிகளை நேரடியாகத் தேர்வு செய்யாமல் மறைமுகமாகத் தேர்வு செய்யும் முறையை திமுக-வினர்தான் கொண்டு வந்தனர்.
  • நாங்கள் இப்போதும் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். எங்களைப் பொறுத்தவரையில் உள்ளாட்சித் தேர்தலில் 50% இடங்களைக்கூட கேட்போம்.
  • மஹாராஷ்டிராவில் அதிகாரம் இருப்பதற்காக எது வேண்டுமானாலும் செய்ய கூடாது. அனைத்தையும் மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர். நேர்மையான முறையில் பெரும்பாண்மையை நிரூபித்த பின்னர், பாஜக ஆட்சி அமைத்திருக்கலாம்
உள்ளாட்சியில் 50% இடங்களை கூட கேட்போம்... பிரேமலதா அதிரடி! title=

விஜயகாந்த் குறித்து பேசிய பாஸ்கரன், அமைச்சராக இருக்கிறாரா என்பதே எனக்கு தெரியாது என அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். இது கூட்டணிக்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக கூட்டணியில் அங்கம்வகிக்கும் தேமுதிக வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் 3 மேயர் பதவிகள் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து அமைச்சர் பேசியதற்கும், மஹாராஷ்டிரத்தில் பாஜக ஆட்சி பொறுப்பேற்றதையும் குறிப்பிட்டு தேமுதிக பொருளாளர் பிரேமலதா கருத்து கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

கட்சி நிர்வாகியின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக தேமுதிக பொருளாளர் பிரேமலதா இன்று மதுரை வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா கூறுகையில் "பாஸ்கரன் என்ற அமைச்சர் இருக்கிறாரா என்பதே எனக்கு தெரியாது. அவரின் இலாகா என்னவென்றும் தெரியாது. மஹாராஷ்டிராவில் அதிகாரம் இருப்பதற்காக எது வேண்டுமானாலும் செய்ய கூடாது. அனைத்தையும் மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர். நேர்மையான முறையில் பெரும்பாண்மையை நிரூபித்த பின்னர், பாஜக ஆட்சி அமைத்திருக்கலாம்" என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், உள்ளாட்சியில் மேயர் உட்பட தலைவர் பதவிகளை நேரடியாகத் தேர்வு செய்யாமல் மறைமுகமாகத் தேர்வு செய்யும் முறையை திமுக-வினர்தான் கொண்டு வந்தனர். தற்போது அதிமுக அதே முறைமையை கையாண்டு இருப்பது தவறில்லை எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து உள்ளாட்சி கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகையில்., நாங்கள் இப்போதும் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். எங்களைப் பொறுத்தவரையில் உள்ளாட்சித் தேர்தலில் 50% இடங்களைக்கூட கேட்போம். ஆனால், கூட்டணி தர்மப்படி அதிமுக எவ்வளவு ஒதுக்குகிறார்கள் என்பதைப் பார்ப்போம் என தெரிவித்துள்ளார். பிரேமலதாவின் இந்த அதிரடி கருத்து தற்போது கூட்டணிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அமைச்சர் பாஸ்கரன், விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து என்ன ஆயிற்று என பார்த்தீர்களா என கேள்வி எழுப்பினார்?.. பாஸ்கரின் இந்த கருத்து விஜயகாத்தினை ஒரு தோல்வியுற்ற அரசியல்வாதியாக சித்தரித்தது. தமிழக அரசியல் களத்தில் அவரது கருத்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Trending News