திமுக - காங்கிரஸ் கூட்டணி இன்னும் உறுதியாகவில்லை. நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் இரு கட்சிகளுக்கு இடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமூகமாக இல்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 9 தொகுதிகள், புதுச்சேரி ஒரு தொகுதி என 10 தொகுதிகளில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டது. இப்போதும் அதே எண்ணிகையை காங்கிரஸ் கட்சி கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் இம்முறை அதிகபட்சம் 6 தொகுதிகளுக்கு மேல் கொடுக்க முடியாது என திமுக திட்டவட்டமாக கூறிவிட்டது.
இதனால் முதல் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு தமிழ்நாடு காங்கிரஸ், திமுக தேர்தல் தொகுதி பங்கீட்டு குழுவை நேரடியாக சந்திக்கவில்லை. மாறாக திமுகவின் நிலைப்பாட்டை டெல்லி சென்று தமிழ்நாடு காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அடுத்த வாரம் தமிழ்நாடு வரும் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் கார்கே இது தொடர்பாக திமுகவிடம் இறுதி பேச்சுவார்த்தையை நடத்தி தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய இருக்கிறார். இருப்பினும் திமுக தரப்பில் 6 தொகுதிகளுக்கும் மேல் கிடையாது என்பதில் உறுதியாக இருப்பதால், மனகசப்பில் இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் என்ன செய்யலாம் என ஆலோசித்துக் கொண்டிருக்கிறது.
மேலும் படிக்க | பிரதமரே தமிழ்நாட்டை வளர்க்கிறீங்களா? டேட்டாவுடன் மோடிக்கு வகுப்பெடுத்த பிடிஆர்
இதனையறிந்து கொண்ட அதிமுக, காங்கிரஸ் கட்சியின் தேவையை பூர்த்தி செய்ய தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் பேசும்போது, அதிமுக கூட்டணிக்கு வர தயாராக இருந்தால் காங்கிரஸ் தாராளமாக வரலாம் என தெரிவித்துள்ளார். இந்நிலையில், இது குறித்து விளக்கம் அளித்திருக்கும் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த மனக்கசப்பும் இல்லை என கூறியுள்ளார்.
இருக்கட்சிகளும் தோழமையுடன் இருப்பதாகவும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒதுக்கிய தொகுதிகளை விட கூடுதலான தொகுதிகளை திமுக ஒதுக்கும் என நம்புவதாக தெரிவித்தார். அதேநேரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடவும் தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கும் அவர், அப்படியான சூழல் தமிழ்நாட்டில் ஏற்படாது என்பதிலும் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்தமுறை போலவே மார்ச் இறுதிக்குள் காங்கிரஸ் - திமுக தொகுதி பங்கீடு இறுதியாகும் என்றும் செல்வ பெருந்தகை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சாந்தன் மரணம்! அதிகாரபூர்வ அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ