Zee News - Matrize Opinion Poll: மக்களவை தேர்தல் தேதி மற்றும் அட்டவணை நாளை (மார்ச் 16) மதியம் 3 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. தலைமை தேர்தல் ஆணையரான ராஜிவ் குமாரும், நேற்று புதியதாக நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர்களான ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோர் நாளை செய்தியாளர்களை சந்தித்து மக்களவை தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளனர்.
மக்களவை தேர்தல் தேதிகள் (Lok Sabha Election 2024) அறிவிக்கப்படும் முன்னரே, தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாவது வழக்கம். அந்த வகையில், நமது Zee News மற்றும் Matrize நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது.
மீண்டும் பாஜக
அதில் பாஜக மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தேசிய ஜனநாயக கூட்டணி 390 தொகுதிகளை கைப்பற்றும் என முடிவுகள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 96 தொகுதிகளை கைப்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, Hindi Hotland என கூறப்படும் இந்தி பேசும் மக்கள் நிறைந்த பகுதிகளில் பாஜகவே அதிக வெற்றிகளை குவிக்கும் என இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் திமுகவின் ஆதிக்கம்
தமிழ்நாட்டை பார்த்தோமால் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் திமுக கூட்டணி 36 இடங்களையும், அதிமுக கூட்டணி 2 இடங்களையும், பாஜக கூட்டணி 1 தொகுதியையும் கைப்பற்றும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவில் நிலவரம் என்ன?
தமிழ்நாட்டில் மட்டுமின்றி கேராளவிலும் இந்திய கூட்டணியின் ஆதிக்கமே நிறைந்திருக்கிறது. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளையும் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் சிபிஐ கட்சிகள்தான் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக அங்கு ஒரு தொகுதியை கூட கைப்பற்றாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தெலங்கானா மற்றும் ஆந்திராவில் பாஜக சற்றே தனது கணக்கை தொடங்கி உள்ளது எனலாம். ஆந்திராவை பொறுத்தவரை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 12 தொகுதிகளையும், தேசிய ஜனநாயக கூட்டணி 13 தொகுதிகளையும் வெல்லும் என முடிவுகள் தெரிவிக்கின்றன. அதேபோல் தெலங்கானாவில் காங்கிரஸ் 9 தொகுதிகளையும், பாஜக 5 தொகுதிகளைும், பிஆர்எஸ் 2 தொகுதிகளையும், ஏஐஎம்ஐஎம் 1 தொகுதியையும் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.
ஆனால், கர்நாடாகாவில் இந்தியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என Zee News கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. அதாவது, தேசிய ஜனநாயக கூட்டணி 23 தொகுதிகளையும், காங்கிரஸ் 5 தொகுதிகளையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளதாக கூறப்பட்ட மகாராஷ்டிராவில் 45 இடங்களை பாஜக கூட்டணி கைப்பற்றும் எனவும், இந்தியா கூட்டணி 3 தொகுதிகளையே கைப்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 24 தொகுதிகளையும், பாஜக 17 தொகுதிகளையும் கைப்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | எல்லை மீறிய எதிர்க்கட்சிகள்... ஆன்லைன் மீம்களால் தற்கொலை செய்த பெண் - நடந்தது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ