முத்தமிழ் வித்தகர் கலைஞர் கருணாநிதியின் நினைவுநாள் தமிழகத்தில் அனுசரிப்பு

Kalaignar karunanidhi Memorial Day:  தமிழத்தை ஐந்து முறை ஆட்சி செய்தவரும், திமுகவின் தலைவருமன மு.கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவு நாள் ஆகஸ்ட் 7ஆம் தேதியான இன்று மாநிலம் முழுவதிலும் அனுசரிக்கப்படுகிறது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 7, 2022, 02:14 PM IST
  • முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நினைவுநாள்!
  • 2018ஆம் ஆண்டு உயிரிழந்த கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு
  • மாநிலம் முழுவதும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன
முத்தமிழ் வித்தகர் கலைஞர் கருணாநிதியின் நினைவுநாள் தமிழகத்தில் அனுசரிப்பு title=

சென்னை: தமிழத்தின் முதல்வராக ஐந்து முறை ஆட்சி செய்தவரும், திமுகவின் தலைவருமன மு.கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவு நாள் ஆகஸ்ட் 7ஆம் தேதியான இன்று மாநிலம் முழுவதிலும் அனுசரிக்கப்படுகிறது. முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நினைவுநாளான இன்று, அவருக்கு வைகோ புகழ் வணக்கம் செலுத்தினார். மெளன அஞ்சலி ஊர்வலம், மாராத்தான் போட்டி, பேச்சுப்போட்டி என அன்னாரின் நினைவை தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் விமரிசையாக அனுசரித்தனர்.

ஆசியாவின் மிகப்பெரிய கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி சென்னை பெசன்ட் நகரில் தொடங்கியது,அமைச்சர்கள்   அமைச்சர்கள் K.N.நேரு,ஏ.வா.வேலு, மா.சுப்பிரமணியன், மேகநாதன் ஆகியோர்  கொடியசைத்து தொடங்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் முக ஸ்டாலின் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் K.N.நேரு,ஏ.வா.வேலு, மா.சுப்பிரமணியன், மேகநாதன் ஆகியோர்  கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

42 கிலோமீட்டர் தூரமும்,21 கிலோமீட்டர்,10 கிலோமீட்டர்,5 கிலோமீட்டர் என நான்கு பிரிவுகளாக நடைபெற்றது.இந்தியாவோடு சேர்த்து 10 நாடுகளை சேர்ந்த வீரர்களும்,தமிழகத்தோடு 19 மாநிலங்களை சேர்ந்த மாரத்தான் வீரர்களும் என ஒட்டுமொத்தமாக 43,210 நபர்கள் இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டனர்.

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, இன்று 7.8.2022 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு, தலைமை நிலையம் தாயகத்திலிருந்து புறப்பட்டு மெரினா கடற்கரையில் உள்ள கலைஞரின் நினைவிடத்தில் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் புகழஞ்சலி செலுத்தினார்கள்.

அவருடன் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ, மாவட்டச் செயலாளர்கள் சு.ஜீவன், சைதை ப.சுப்பிரமணி, டி.சி.இராசேந்திரன், சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் முராத் புகாரி உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட திமுக சார்பில் மெளன ஊர்வலம் நடைபெற்றது. ஓசூர் மாநகர திமுக சார்பில் கருணாநிதியின் நினைவு நாள் அமைதி பேரணி அனுசரிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக மற்றும் ஓசூர் மாநகர திமுக சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர் மறைந்த கலைஞர் மு கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி, பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் படிக்க | கலைஞர் கருணாநிதி நினைவு நாள் - அமைதி பேரணி நடத்தும் திமுக

ஓசூர் எம் எல் ஏ ஒய் பிரகாஷ், ஓசூர் மாநகர மேயர் எஸ் ஏ சத்யா, உள்ளிட்ட மாவட்ட மாநகர திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும், தாலுகா அலுவலக சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலையில் இருந்து, ராம் நகர் அண்ணா சிலை வரை தேன்கனிக்கோட்டை சாலை, ஏரி தெரு, பழைய பெங்களூரு சாலை வழியாக பேரணியாக நடந்து வந்து அங்கு வைக்கப்பட்டிருந்த மறைந்த தலைவரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.

திமுக தலைவர் கலைஞரின் நான்காவது ஆண்டு நினைவஞ்சலி நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் தலைமையில் வண்ணாரப்பேட்டை மத்திய மாவட்ட அலுவலகத்தில் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் படிக்க | அதிமுகவில் அடுத்த பஞ்சாயத்து... சீரியஸா எடுத்துக்காதீங்க என்று ஜெயக்குமார் விளக்கம்

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சரவணன் துணைமேயர் ராஜு மாநில தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் சுப்பிரமணியன் மத்திய மாவட்ட அவைத்தலைவர் சுப சீதாராமன் மாமன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி உலகநாதன் சங்கர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து தச்சநல்லூர் பகுதியில் அமைந்துள்ள அண்ணாவின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் அமைக்கப்பட்டு இருந்த கலைஞரின் படத்திற்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இவ்வாறு முத்தமிழ் வித்தகர் என்று அறியப்படும் தமிழக முன்னாள் முதல்வருக்கு அஞ்சலி நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க | ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு - நிர்வாகத்தின் பதிலுக்கு குவியும் கண்டனம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News