லட்ச கணக்கில் பணம் மோசடி செய்த திமுக பிரமுகர் - விரக்தியில் விஷம் குடித்து அப்பாவி தற்கொலை !

உணவக உரிமையாளர் ஒருவரிடம் 3 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு திமுக பிரமுகர் ஏமாற்றிய விரக்தியில் அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Dayana Rosilin | Last Updated : Jul 4, 2022, 03:59 PM IST
  • உணவக உரிமையாளரிடம் பணம் பெற்ற திமுக பிரமுகர்
    ஒப்பந்த பத்திரம் வழங்காமல் மோசடி செய்ததாக புகார்
    மனமுடைந்த உணவக உரிமையாளர் தற்கொலை
லட்ச கணக்கில் பணம் மோசடி செய்த திமுக பிரமுகர் - விரக்தியில் விஷம் குடித்து அப்பாவி தற்கொலை ! title=

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கணக்கர் தெருவைச் சேர்ந்தவர் முத்தரசு (52). இவர் தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் பகுதியிலுள்ள ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான உணவகத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இந்த உணவகத்தை நடத்தி வந்த திமுக பிரமுகரும், ஆனந்தன் என்பவரின் மருமகனுமாகிய ரெனி, முத்தரசுக்கு உணவகத்தை வாடகைக்கு கொடுத்துள்ளார். 

இதற்கு அட்வான்ஸ் தொகையாக முதலில் 1 லட்சம் ரூபாயும், பின்னர் பைனான்ஸ் மூலம் 2 லட்சம் ரூபாயும் ரெனி பெற்றுக்கொண்டுள்ளார். இதற்கு ஒப்பந்த பத்திரம் 3 மாதத்திற்கு பிறகு செய்து கொடுப்பதாகவும் முத்தரசுக்கு ரெனி வாக்குறுதி அளித்துள்ளார். 

மேலும் கடைக்கு மாதம் வாடகையாக 15 ஆயிரம் ரூபாயும், சமையல் பாத்திரங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஆயிரம் ரூபாயும், மின் கட்டணம், தங்கும் அறை என மொத்தம் மாதத்திற்கு 90 ஆயிரம் வரை வசூல் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் பார்த்திட வாடகையை 500 ரூபாய் உயர்த்தி ரெனி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. 

இதனைத் தொடர்ந்து  3 மாதங்கள் முடிந்த நிலையில் ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி 3 லட்ச ரூபாய்க்கான ஒப்பந்த பத்திரம் செய்து தரும்படி முத்தரசு ரெனியிடம் கேட்டுள்ளார். இதற்கு இதுவரை கடை நடத்தியதற்கு கொடுத்த 3 லட்ச ரூபாயும் கழிந்து  விட்டதாக தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | சட்டவிரோதமாக, வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற 51 இலங்கையர்கள் கைது 

அப்போது திமுக பிரமுகர் ரெனி, முத்தரசுவை அவமானப்படுத்தும் விதமாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த முத்தரசு கடந்த 2ஆம் தேதி கறம்பக்குடியில் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதையடுத்து அவர் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதுகுறித்து திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் முத்தரசுவின்  உறவினர்கள் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் புதுக்கோட்டை மருத்துவமனை வளாகத்திற்குள் முத்தரசுவின் உடலை  வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு உடலைப் பெற்றுக் கொண்டார். மேலும் முத்தரசுவின் சாவுக்கு காரணமான திமுக பிரமுகர் ரெனி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கேட்டுக்கொண்டனர்.

மேலும் படிக்க | மகாராஷ்ட்ராவில் நடந்தது தமிழகத்திலும் நடக்கலாம் - எச்சரிக்கும் பாஜக!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News