மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை ஸ்டாலின், வைகோ, கி.வீரமணி உள்ளிட்டோர் தொடங்கி வைத்துள்ளனர்.
குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தைத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. பல அரசியல் கட்சிகளும், மாணவ அமைப்புகளும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தின. இதனால் பல இடங்களில் வன்முறை சம்பவங்களும் நிகழ்ந்தன.
இந்நிலையில் தமிழகத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. திமுக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் தொடங்குவதாக முடிவெடுக்கப்பட்டது. அதன்படி இன்று சென்னை கொளத்தூர் பகுதியில் கையெழுத்து இயக்கத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
Chennai: DMK President MK Stalin holds a signature campaign in Kolathur, against #CitizenshipAmendmentAct. #TamilNadu pic.twitter.com/kw5jJSgy1c
— ANI (@ANI) February 2, 2020
கும்பகோணத்தில் திராவிடர் கழகம் இயக்கத்தின் தலைவர் கி.வீரமணி குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். சென்னையில் மதிமுக தலைவர் வைகோ கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்துள்ளார்.