கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் சமயத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்திருந்தார். தேர்தலில் திமுக வென்ற பிறகு அந்த வாக்குறுதியையும் நிறைவேற்றினார். அதேசமயம், இந்தத் திட்டத்தால் வருவாய் இழப்பு ஏற்படும் என எதிர்க்கட்சியினர் குற்றஞ்சுமத்தினர். இருப்பினும் இந்தத் திட்டம் தற்போது சிறப்பாக நடைமுறையில் இருக்கிறது.
இந்நிலையில் இந்த திட்டத்தின் பயன்கள் குறித்து மாநில திட்டக்குழு சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விவசாய பகுதியான நாகப்பட்டினம் மாவட்டம், தொழில்வள பகுதியான திருப்பூர் மாவட்டம், வர்த்தக பகுதியான மதுரை மாவட்டம் ஆகிய 3 மாவட்டங்களில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட பெண்கள் 40 வயதை கடந்தவர்கள். பயணத்துக்காக குடும்ப உறுப்பினர்களை சார்ந்திருக்கும் நிலையில் மாற்றம் வந்திருக்கிறதா? அதிகாரம் அளிப்பது மற்றும் கண்ணியம் போன்ற அம்சங்களில் இலவச பஸ் பயண திட்டம் ஏதேனும் பங்களிப்பு செய்கிறதா என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன.
மேலும் படிக்க | காசி தமிழ் சங்கமம் ரயில் கோவையில் இருந்து இன்று காலை கிளம்பியது
இதற்கு பதில் அளித்த பெண்கள் மாத சேமிப்பில் ஒரு குறிப்பிட்ட அளவு மிச்சம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். அதாவது மாதந்தோறும் சராசரியாக ரூ.888 என்ற அளவில் சேமிப்பு ஏற்படுவதாக தெரிவித்தனர். இலவச பஸ் பயண திட்டத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் பண ரீதியில் சேமிப்பு கிடைத்தாலும், பஸ்களை இயக்கும் டிரைவர்கள், கண்டக்டர்கள் செயல்பாடுகளில் மாற்றம் தேவை என்ற கருத்தும் ஆய்வின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பஸ்கள் அடிக்கடி இயக்கப்பட வேண்டும் எனவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த கருத்துக்களின் அடிப்படையில் இலவச பஸ் பயண திட்டத்தை தமிழக அரசு மேம்படுத்த உள்ளது.
மேலும் படிக்க | ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ