சென்னை: தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் (TN Assembly Polls 2021) நடைபெற உள்ளதால், நேற்று (நவம்பர் 16) வரைவு வாக்காளர் பட்டியலை (Election Draft List) அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வெளியிட்டனர். அதன் அடிப்படையில் தமிழகத்தில் மொத்தம் 6,10,44,358 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்கள் 3,01,12,370 பேரும், பெண்கள் 3,09,25,603 பேரும் மற்றும் மாற்று பாலினத்தவர்கள் 6,385 பேரும் இடம் பெற்றுள்ளனர். மேலும் வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெறவில்லை என்றால், இம்மாதம் 21, 22 ஆம் நாள்களிலும் மற்றும் அடுத்த மாதம் 12,13 ஆம் நாட்களிலும் வாக்காளர் பட்டியலில் (Election Draft List) பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்தம் செய்வது தொடர்பாக சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை (TN Assembly Elections 2021) நடைபெற உள்ளதையொட்டி ஜனவரி மாதம் 20 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. எனவே அதற்கு முன்பாகவே சிறப்பு முகாம் மூலம் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கவோ, வாக்காளர் அட்டையில் திருத்தம் மேற்கொள்ள விரும்புவோர் நான்கு நாள் நடைபெறும் சிறப்பு முகாம்களை கட்டாயம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
உங்கள் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடப்பெற்றிருக்கிறதா? உங்கள் விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா? என்பதை https://www.elections.tn.gov.in/ என்ற இணைதளம் மூலம் நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். ஒருவேளை உங்கள் பெயர் இல்லையென்றால், வாக்காளர் திருத்தம் முகாம் மூலம் சரிசெய்துக்கொள்ளலாம்.
ALSO REREAD | வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? எப்படி சரிபார்ப்பது?
வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் முகாம் பின்வரும் தேதிகளில் அவரவர் பகுதிக்கு உட்பட்ட ஓட்டுச் சாவடிகளில் நடைபெறுகிறது
சிறப்பு முகாம் நடைபெறும் மாதம் மற்றும் தேதி
நவம்பர் மாதம்:
21.11.2020
22.11.2020
28.11.2020
29.11.2020
மற்றும்
டிசம்பர் மாதம்:
05.12.2020
06.12.2020
12.12.2020
13.12.2020
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தேவையான ஆவணங்கள்:
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ - 1
முகவரி சான்று (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)
1.பாஸ்போர்ட்
2.கேஸ் பில்
3.தண்ணீர் வரி ரசீது
4.ரேஷன் அட்டை
5.வங்கி கணக்கு புத்தகம்
6.ஆதார் கார்டு
ALSO REREAD | பாஜக-வுடன் கை கோர்க்கப்போகிறாரா அழகிரி? சூடி பிடிக்கும் தேர்தல் களம்!!
வயது சான்று (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)
1.10ம் வகுப்பு சான்றிதழ்
2.பிறப்பு சான்றிதழ்
3.பான் கார்டு
4.ஆதார் கார்டு
5.ஓட்டுனர் உரிமம்
6.பாஸ்போர்ட்
7.கிசான் கார்டு
அடையாள சான்று (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)
1.பான் கார்டு
2.ஓட்டுனர் உரிமம்
3.ரேஷன் கார்டு
4.பாஸ்போர்ட்
5.வங்கி கணக்கு புத்தகம் போட்டோ உடன்
6.10ம் வகுப்பு சான்றிதழ்
7.மாணவர் அடையாள அட்டை
8.ஆதார் கார்டு
ALSO READ | மீண்டும் அதிமுக ஆட்சி? மெகா கருத்துக்கணிப்பை நடத்திய தன்னார்வ அமைப்புகள்!!
இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். உங்கள் பெயரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறச் செய்யுங்கள். ஜனநாயகத்தை தேர்ந்தெடுக்கும் உரிமையை பெறுங்கள். ஓட்டு உங்கள் உரிமை.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR