செங்கல்பட்டு - தாம்பரம் இடையே இன்று காலை 8.25 முதல் மாலை 6.40 வரை மின்சார ரயில் இயங்காது என தெற்கு ரயில்வே அறிவிப்பு!!
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி முதல் வண்டலூர் வரை தற்போதுபாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரையிலான பகுதிகளுக்கு இன்று காலை 8.25 முதல் மாலை 6.40 மணி வரை மின்சார ரெயில் இயங்காது என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, இந்த பகுதிகளுக்கிடையே மின்சார ரெயில் சேவையில் 10 மணிநேரத்திற்கும் கூடுதலாக பாதிப்பு ஏற்படும். இப்பகுதியில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் தங்களது பணிகளை திட்டமிட்டு அமைத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.