சிறப்பு நனைப்பு பாசனத்திற்காக ஈரோடு மாவட்டம் குண்டேரிப்பாளையம் நீர்தேக்கம் திறக்கப்பட்டுள்ளது!
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டம், குண்டேரிப்பாளையம் நீர்தேக்கத்தில் இருந்து வலது மற்றும் இடது வாய்கால்கள் மூலம் சிறப்பு நனைப்ப பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உத்தரவு பிரப்பித்துள்ளார்.
இந்த உத்தரவின்படி வரும் 30.08.2018 முதல் 08.09.2018 வரை 10 நாட்களுக்கு குண்டேரிப்பாளையம் நீர்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், குண்டேரிப்பள்ளம் நீர்த் தேக்கத்திலிருந்து 30.8.2018 முதல் 8.9.2018 வரை தண்ணீர் திறந்து விட மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.. pic.twitter.com/0IkDQcGYhS
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) August 28, 2018
இதன் மூலம் 2498 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என தகவல்கள் தெரவிக்கின்றன. மேலும் விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.