பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு பாஜக-வை ரவுண்டு கட்டி விளாசிய ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோட்டில் பேசும்போது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் போகும், நோட்டாவை விட குறைந்த வாக்குகளை பாஜகவினர் பெறுவார்கள் என கூறினார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 2, 2024, 07:39 AM IST
  • பாஜக, பிரதமர் மோடி தோற்க வேண்டும்
  • தமிழ்நாட்டில் மக்கள் சரியாக பாடம் புகட்டுவார்கள்
  • ஈரோட்டில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி
பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு பாஜக-வை ரவுண்டு கட்டி விளாசிய ஈவிகேஎஸ் இளங்கோவன் title=

ஈரோடு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்து கொண்டு ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், மோடியை வரும் நாடாளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக வீழ்த்த வேண்டும். தமிழகத்தில் பாஜக போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழப்பார்கள் என கூறினார். குறிப்பாக பாஜக வேட்பாளர்கள் நோட்டாவை விட கேவலமான வாக்குகளை பெறுவார்கள் என அவர் கூறினார்.

மேலும் படிக்க | வளர்ச்சியின் பாதையில் பயணிப்பதாக மாயப் பிம்பத்தை கட்டும் முயற்சியா இன்றைய பட்ஜெட்?
 
மத்திய நிதி நிலை அறிக்கை என்பது நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திருப்பதிக்கு போய் முட்டை அடிக்கும் முன்பு சமர்பிக்கும் கடைசி பட்ஜெட் என  நினைப்பதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார். தமிழகத்தில் பாஜக-அதிமுக தனித்தனியாக நின்றாலும், ஒன்றாக சேர்ந்து நின்றாலும் சரி இருவரும் சுடுகாட்டிற்கு தான் போவார்கள். இரண்டு கட்சியும் தமிழகத்தில் மிகப்பெரிய தோல்வியை தான் சந்திப்பார்கள் என அவர் தெரிவித்தார். 

தமிழகத்தில் எல்லோரையும் விரும்புவர்கள். மொழி, மத வேறுபாடுகள் இன்றி மக்கள் இருப்பதால், மதத்தால் பிரித்து ஆள நினைக்கும் பாஜகவிற்கு மிகப்பெரிய தோல்வியை தருவார்கள். மோடிக்கும் கொத்தடிமைகளாக இருக்கும் பாஜகவினருக்கு பெருத்த அடியாக இந்த தேர்தல்  இருக்கும் என ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார். இந்தியா கூட்டணி சுறுசுறுப்பாக இயங்குகிறது.இதனால் சில நேரத்தில் சில பிரச்சனைகள் வருவது இயல்பு தான். வரும் நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயமாக இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் நம்பிக்கை தெரிவித்தார். 

ராகுல்காந்தியை  பிரதமர் வேட்பாளராக தான் முன் நிறுத்தி வருகிறோம் என்று கூறிய அவர், கடந்த தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் தான் ராகுல்காந்தியை பிரதமராக வருவார் என்று சொன்னார். கண்டிப்பாக இந்திய தேர்தல் கூட்டணி பெரும் வெற்றி பெறும் போது ஏகோபித்த தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு ராகுல்காந்தி பிரதமராக வருவார் என அவர் கூறினார். 

தமிழக காங்கிரஸ் புதுச்சேரி சேர்த்து 40 தொகுதியும் வேண்டும் என்பது தான் காங்கிரஸ் நிலைப்பாடு. ஆனால் நடைமுறையில் எது சாத்தியமோ அதுதான் கிடைக்கும். எங்களை பொறுத்தவரை பிரதமர் நரேந்திர மோடியும் பாஜகவையும் ஜீரோவாக்க வேண்டும். அதுதான் காங்கிரஸ் நிலைப்பாடு என்ற அடிப்படையில் பணியாற்றுவோம் என தெரிவித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து மிகப்பெரிய வெற்றி பெறுவோம் என பேசினார்.

மேலும் படிக்க | தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் 'இல்லாநிலை' பட்ஜெட்! மத்திய அரசை சாடும் தமிழக முதல்வர் ஸ்டாலின்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News