பீஸ்ட் பார்க்க சென்று காற்று வாங்கிய ரசிகர்கள் - விருதுநகரில் வெறிச்சோடிய தியேட்டர்

விருதுநகரில் அமிர்தராஜ் திரையரங்கத்தில் பீஸ்ட் படத்தை பார்க்க குறைந்த அளவிலேயே ரசிகர்கள் வந்தனர்.

Written by - க. விக்ரம் | Last Updated : Apr 14, 2022, 10:01 AM IST
  • வெறிச்சோடிய தியேட்டர்
  • கலவையான விமர்சனங்களை பெற்ற பீஸ்ட்
  • பீஸ்ட் படம் பார்த்து ரசிகர்கள் ஏமாற்றம்
 பீஸ்ட் பார்க்க சென்று காற்று வாங்கிய ரசிகர்கள் - விருதுநகரில் வெறிச்சோடிய தியேட்டர் title=

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நேற்று பீஸ்ட் வெளியானது. புது கூட்டணியுடன் விஜய் கை கோர்த்ததால் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் படத்துக்கு சென்றனர். ஆனால் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

குறிப்பாக தற்போதைய இயக்குநர்கள் பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்கும்போது ஹீரோக்களின் இமேஜுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றனர் கதையில் கோட்டை விட்டுவிடுகின்றனர் என்ற கூற்றுக்கு வலு சேர்க்கும் வகையிலேயே பீஸ்ட் இருப்பதாக ரசிகர்களும், விமர்சகர்களும் கூறுகின்றனர்.

Nelson

அதுமட்டுமின்றி படத்தில் கொஞ்சம்கூட லாஜிக்கே இல்லை. எத்தனை காலம்தான் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக தமிழ் சினிமாவில் காண்பிப்பார்கள். இதை எப்படி விஜய் அனுமதித்தார் என்ற பேச்சும் சமூக வலைதளங்களில் எழுந்திருக்கிறது.

 

இந்நிலையில் விருதுநகரில் அமிர்தராஜ் என்ற திரையரங்கில் பீஸ்ட் படம் திரையிடப்பட்டது.

மேலும் படிக்க | பிரதமருக்கே சவால் விட்ட ராக்கி பாய்! கேஜிஎஃப் 2 விமர்சனம்!

நேற்று காலை 7 மணி காட்சிக்கு கூட்டம் அலைமோதும் என எதிர்பார்த்திருந்த தியேட்டர் நிர்வாகத்துக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக சொற்ப அளவிலேயே ரசிகர்கள் வந்தனர்.இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Virudhunagar

நேற்று அதிகாலை காட்சி பார்த்தது முதலே ரசிகர்கள் பீஸ்ட்டுக்கு நெகட்டிவ் விமர்சனத்தையே கொடுத்தனர். இதன் காரணமாகக்கூட கூட்டம் குறைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | பீஸ்ட் ஹிட்டா ஃப்ளாப்பா... தயாரிப்பு நிறுவனம் சொல்வது என்ன?

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News