11:20 | 23-06-2018
நாமக்கல்லில் ஆளுநருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
மாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் காட்டம்!
சேலம் 8 வழி சாலை திட்டப்பணிகளை மக்களின் கருத்துகளை கேட்ட பின்னர் நிறைவேற்ற வேண்டும் என ஸ்டாலின் தலைமையில் போராட்டம்!!
மத்திய அரசின் நிதியில் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் சேலம் முதல் சென்னை வரை 8 வழி பசுமை சாலை அமைக்க மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
சென்னை - சேலம் இடையே 274 கி.மீ. துாரத்திற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்த சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை அமைப்பதற்காக பல நிலங்கள் விவசாயிகளிடமிருந்து கையாக படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை எதிர்த்து பல்வேறு அமைப்பினர் மற்றும் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சேலம் 8 வழி சாலை திட்டப்பணிகளை மக்களின் கருத்துகளை கேட்ட பின்னர் நிறைவேற்ற வேண்டும் எனவும், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் செய்யவேண்டிய பணிகளை ஆளுநர் செய்வது கண்டிக்கத்தக்கது. எனவே, ஆளுநர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த திடீர் போராட்டம் நடைபெறுகிறது என செய்தியாளர்களிடம் எதிர்கட்சி தலைவர் திமுக செயல்தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Chennai: DMK working Pres MK Stalin detained while protesting against TN Guv Banwarilal Purohit. 192 DMK cadres were detained in Trichy yesterday while they were holding black-flag protest against Governor. Stalin says, 'Protest is against Guv's interference in federal structure' pic.twitter.com/91WuDUk7jg
— ANI (@ANI) June 23, 2018
இதை தொடர்ந்து, நாமக்கல்லில் ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி வீசிய திமுக-வினரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் போராட்டம்.