மாவட்டங்களில் உள்ள நியாய விலை கடைகளில் பயோமெட்ரிக் கைரேகை ஸ்கேன் முறை அமல்

பி.டி.எஸ் அரிசி மற்றும் பிற ரேஷன் பொருட்களின் கடத்தலைத் தவிர்ப்பதற்காக அனைத்து நியாயவிலைக்களிலும் பயோமெட்ரிக் கைரேகை பதிவேடு முறையை கொண்டுவரப்படும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 28, 2020, 04:40 PM IST
மாவட்டங்களில் உள்ள நியாய விலை கடைகளில் பயோமெட்ரிக் கைரேகை ஸ்கேன் முறை அமல் title=

சென்னை: பி.டி.எஸ் அரிசி மற்றும் பிற ரேஷன் பொருட்களின் கடத்தலைத் தவிர்ப்பதற்காக அனைத்து நியாயவிலை கடைகளில் (Ration Shop) பயோமெட்ரிக் கைரேகை பதிவேடு முறையை கொண்டுவர மாநில சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் முதற்கட்ட முயர்சியில் ஜூலை 27 முதல் திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் பைலட் அடிப்படையில் பயோமெட்ரிக் கைரேகை செயல்படுத்தப்படுகிறது. 

கடந்த சனிக்கிழமையன்று நுகர்வோர் பாதுகாப்புத் துறை தரப்பில் மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் பயோமெட்ரிக் (Fingerprint Scan) கைரேகை பதிவேடு குறித்து அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் இரண்டு கோடிக்கு மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் (Ration Holder) உள்ளனர். ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் கார்டுகளில் பட்டியலிடப்பட்டுள்ள குடும்ப உறுப்பினர்களைத் தவிர, வேறு யாரும் ரேஷன் பொருட்களை வாங்க முடியாது. 

ALSO READ | ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் இணையக் கூடாது

தற்போது வரை, குடும்ப அட்டையை எடுத்துச் செல்லும் எவரும் ரேஷன் பொருட்களை வாங்கலாம். ஆனால் இனி பயோமெட்ரிக் கைரேகை செயல்முறை கொண்டுவரப்பட்டால், குடும்ப அட்டை உரிமையாளர் மட்டுமர் ரேஷன் பொருட்களை வாங்க முடியும். 

எவ்வாறாயினும், COVID-19 தொற்றுநோய்களுக்கு மத்தியில் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை அறிமுகப்படுத்துவது பாதுகாப்பற்றது என்று பலர் கருத்து தெரிவித்துள்ளதால், இந்த நடவடிக்கை தொழிலாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக பயோமெட்ரிக் முறையை கேரளா அரசும் நிறுத்தி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ | ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை மூலம் பொது விநியோக சீர்குலைக்கும்

மத்திய அரசின் ‘ஒன் நேஷன்-ஒன் ரேஷன் கார்டு’ திட்டம் மூலம் நாடு முழுவதுமுள்ள ரேஷன் கடைகள் அனைத்தும், ஒரே கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல மாநிலங்களில் "ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை" திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

தற்போது தமிழகத்திலும் "ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை" (One Nation One Ration Card) திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என அரசு தரப்பில் கூறப்பட்டு உள்ளது. 

இந்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் "ஒன் நேஷன் ஒன் ரேஷன் கார்டு" திட்டம் தமிழ்நாட்டில் அமல் செய்ய முடிவு செய்யப்பட்டு இருந்தது. இருப்பினும், கோவிட் -19 தாக்குதலைத் தொடர்ந்து இது நிறுத்தப்பட்டது.

ALSO READ | ஆகஸ்ட் 5 முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச முக கவசம்: TN Govt.,

அதேபோல கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவுவதை தடுக்க மாத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையில், மக்களை முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என வழியுறுத்தி வருகிறது. இந்நிலையில், ரேஷன் கடைகளில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் இலவச முகக்கவசம் வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். 

Trending News