சென்னை: ஒவ்வொரு முறையும் ஓட்டுநர் உரிமம் சம்பந்தமான பணிகளை மேற்கொள்ள ஆர்டிஓ அலுவலகத்திற்கு செல்ல வேண்டி இருக்கிறது. தற்போது அனைத்து பணிகளும் டிஜிட்டல் முறைக்கு மாறி வருகிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில், இனி வரும் காலங்களில் ஆர்டிஓ அலுவலகத்திற்கு நேரில் வராமல் இணைய வழியிலேயே எல்எல்ஆர் (LLR), ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம் செய்து கொள்ளும் வசதிகள் செயல்படுத்தப்பட உள்ளது. விரைவில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அமல் செய்யப்படும் என தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் (Transport Minister Raja Kannappan) தெரிவித்துள்ளார்.
இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசிய முக்கிய அறிவிப்புகள குறித்து பார்ப்போம்.
> ஆதார் அட்டையின் (Aadhaar Card) அடிப்படையில் ஆன்லைன் மூலம் பழகுநர் உரிமம் மற்றும் ஓட்டுநர் உரிமத்தை பெறலாம் (ஆர்டிஓ அலுவலகங்களுக்கு வராமலேயே)
> ஓட்டுநர் உரிமத்தை புதுபித்தல் (Driving Licence Update), முகவரி மாற்றம் போன்ற சேவைகளையும் ஆன்லைன் மூலம் பெறலாம். (ஆர்டிஓ அலுவலகங்களுக்கு வராமலேயே)
> தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.
> தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பாக 10 இடங்களில் பெட்ரோல், டீசல் பங்குகள் தொடங்கப்படும்.
> தமிழ்நாடு போக்குவரத்துத்துறையின் வருவாய் அதிகரிக்கும் நோக்கத்தில் பெட்ரோல், டீசல் சில்லரை விற்பனை நிலையங்கள்.
> பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கருத்தில் கொண்டு 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.
> புதிய தொழில்நுட்பத்தில் 2,213 டீசல் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்
ALSO READ | கீழடி அகழாய்வு உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளது: சட்டப்பேரவையில் மு.க. ஸ்டாலின் உரை
ALSO READ | டிரைவிங் லைசென்ஸ் உரிமம் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை!
ALSO READ | Driving Licence அப்ளை செய்ய வேண்டுமா? RTO அலுவலகம் கூட செல்லாமல் வேலை நடக்கும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR