இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புயல் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை நேரில் பார்வையிட்டார். மேலும் மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இன்று காலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்ற முதல்வர், அங்கிருந்து வாகனம் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்றார். அவருடன் எம்.பி., மாவட்ட கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகள் இருந்தனர்.
உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து, இறுதி வரை தேடுதல் பணி நடைபெறும் எனவும் கூறினார். ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை ஆய்வு செய்தார்.
ஓகி புயலால் ஏற்பட்ட பாதிப்புகள், புயல் நிவாரண பணிகள் பற்றி கேட்டறிந்தார். மேலும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் கூறியதாவது:-
உயிரிழந்த மீனவ குடும்பத்துக்கு தலா ரூ 20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். உயிரிழந்த மீனவ குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியில் வேலை வழங்கப்படும். காணாமல் போன மீனவர்களை இறுதி வரை தேடுதல் பணி நடைபெறும் எனவும் கூறினார்.