தமிழர்களுக்கு இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்: அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

பொங்கல் திருநாளையொட்டு தமிழக அரசியல் தலைவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Last Updated : Jan 13, 2018, 01:44 PM IST
தமிழர்களுக்கு இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்: அரசியல் தலைவர்கள் வாழ்த்து! title=

தமிழர்களுக்கு அரசியல் தலைவர்கள் தா களின் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், அகிலமே பயனுறும் வகையில் தன் உழைப்பையும், அறிவையும், ஆற்றலையும் வழங்கிய நம் தமிழ் இனம் சிறப்பாக பொங்கல் விழா கொண்டாட வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ம.தி.மு.க பொதுச்செயலளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், எத்தனை சோதனைகள், வேதனைகள் சூழ்ந்தாலும் அவற்றை தாங்கிக்கொண்டு தமிழகத்தின் நலன், ஜனநாயகத்தைக் காக்க பொங்கல் திருநாளில் தமிழக மக்கள் உறுதிகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், எல்லைக்கோடுகளை கடந்து, எல்லையில்லா மகிழ்ச்சி அளிக்கும் இந்த உவகைத் திருநாளில் மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று வாழ வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.

தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், நெற்றி வியர்வை நிலத்தில் விழ, பாடுபட்டு பலனை அனுபவிக்கும் நாள் பொங்கல் திருநாள் எனவும், ஆனால், இந்த ஆண்டு போதிய தண்ணீர் இல்லாததாலும், பயிர்கள் கருகியதாலும் பல விவசாயிகள் தற்கொலைக்கு ஆளாகியதாக தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் வாழ்த்து செய்தியில், இந்தியாவின் பன்முக பண்பாட்டை பாதுகாத்து, தமிழ், தமிழர்களின் உரிமைகளை காத்து நிற்கவும், விவசாயம், விவசாயிகளை பாதுகாக்கவும் தொடர்ந்து பாடுபட பொங்கள் திருநாளில் உறுதி ஏற்போம் என தெரிவித்துள்ளார்.

டி.டி.வி தினகரன் எம்எல்ஏ ஆகியோரும் வாழ்த்து வாழ்த்து செய்தியில், தை முதல் நாள் முதல், தமிழ் மக்களின் வாழ்வு மேம்பட, நாடு வளம்பெற நல்வழிப் பிறக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 

புதுச்சேரி மக்கள் வாழ்வில் எல்லா வளமும் பொங்கிட வேண்டுவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியும், இது தமிழர்களின் தனிச்சிறப்பு மட்டுமல்ல, தமிழர்களின் உயர்பண்பு என தெரிவித்துள்ளனர்.

 

 

Trending News