கடலோர தமிழகத்தில் சில இடங்களில் லேசான து முதல் மிதமான மழை பெய்யும்:IMD

அடுத்த 24 மணி நேரத்தில் கடலூர மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Last Updated : Sep 13, 2019, 03:26 PM IST

Trending Photos

கடலோர தமிழகத்தில் சில இடங்களில் லேசான து முதல் மிதமான மழை பெய்யும்:IMD title=

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கடலூர மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, மேலும் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக மதுரை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே பேட்டை, பள்ளிப்பட்டு மற்றும் நீலகிரி மாவட்டம் தேவாலாயத்தில் 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளார்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் காற்றுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும் சென்னையில் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை ஏற்பட வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Trending News