நெல்லை, ராமநாதபுரம், மதுரை, தேனி, சேலம், நீலகிரி, தருமபுரி, நாமக்கல், கோவையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..!
தமிழகத்தின் தெற்கு மற்றும் உள்மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில்; வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தெற்கு மற்றும் உள்மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார்.
மேலும், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், மதுரை, தருமபுரி, நாமக்கல், நெல்லை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறினார். தெற்கு உள்மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.