செல்போன் வாங்கனும்னா இந்த வருடமே வாங்கிடுங்க! 2025-ல் விலை அதிகரிக்குமாம்!

Cell Phone Prices To Increase In The Year 2025 : வரும் 2025ஆம் ஆண்டில் செல்போன் விலை அதிகரிக்கும் என்ற அதிர்ச்சி தகவல் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.  

Written by - Yuvashree | Last Updated : Nov 14, 2024, 06:51 PM IST
  • செல்போன் விலை அதிகரிக்கும் அபாயம்!
  • இந்த வருஷமே புது போன் வாங்கிருங்க..
  • விலை அதிகரிப்புக்கு காரணம் என்ன?
செல்போன் வாங்கனும்னா இந்த வருடமே வாங்கிடுங்க! 2025-ல் விலை அதிகரிக்குமாம்! title=

Cell Phone Prices To Increase In The Year 2025 : செல்போன்கள் கையில் தவழ ஆரம்பித்ததில் இருந்து, பல விஷயங்கள் இலகுவாக மாறியிருக்கிறது. அதே சமயத்தில் அந்த செல்போன்கள் நம் கையில் இல்லை என்றால் ஒரு வேலையும் ஓடாத நிலை தற்போது எழுந்திருக்கிறது. நடப்பாண்டிலேயே ஸ்மார்ட் போன்களின் விலை அதிகரித்திருக்கும் நிலையில், இனி வரவிருக்கும் 2025ஆம் ஆண்டிலும் போன்களின் விலை விண்ணைத்தொடும் என கூறப்படுகிறது. 

காரணம் என்ன? 

இந்த செல்போன் விலை அதிகரிப்புக்கு காரணமாக, AI சிப்செட்களின் விலை அதிகரிப்பு, 5ஜி நெட்வர்க்கின் வருகையினால் ஏற்பட்டிருக்கும் செலவுகள் அதிகரிப்பு ஆகியவை கூறப்படுகின்றன. இதனால், வரும் 2025ஆம் ஆண்டில், இப்போது இருப்பதை விட, போன் வாங்க அதிக செலவாகலாம் என கூறப்படுகிறது. 

இது குறித்த மார்க்கெட் அவுட்லுக் அறிக்கையில், 2024ஆம் ஆண்டில் ஸ்மார்ட் போன்களின் சராசரி விற்பனை விலை, உலகளவில் 3 சதவிகிதம் அதிகரித்து இருக்கும் என கூறப்பட்டிருக்கிறது. அதாவது, அமெரிக்க டாலர் விலையின் படி, $365ஆக இருக்குமாம். இந்த விலை, வரும் 2025ஆம் ஆண்டில், மேலும் 5 சதவிகிதம் அதிகரிக்கலாம் எனக்கூறப்படுகிறது. 

உலக மக்கள், தற்போது அதிக சக்தி வாய்ந்த ப்ராசசர்கள் மற்றும் AI தொழில்நுட்பம் அடங்கிய அதிக விலையுள்ள ஸ்மார்ட் போன்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். பலர், இந்த அம்சம் இருக்கும் போன்களுக்குத்தான் முக்கியத்துவமும் கொடுக்கின்றனர். இது, விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 

விலை உயர்ந்த சிப்கள்:

AI அம்சங்கள் நிறைந்த போன்களின் விலை, குறிப்பாக Generative AI அம்சம் பொருந்திய ஸ்மார்ட் போன்களின் விலை அதிகரித்து வருகின்றன. இதனால், ஸ்மார்ட் போன்களை தயாரிக்கும் நிறுவனங்கள், NPU, CPU மற்றும் GPU சிப்கள் கொண்ட போன்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகின்றன. 

இருப்பதிலேயே, இந்த சிப்களை தயாரிக்க அதிக செலவாகுமாம். எனவே, இந்த AI அம்சங்கள் அடங்கிய போன்களை வாங்க மக்கள் முன்னுரிமை கொடுக்கும் போது, அந்த அம்சங்கள் அடங்கிய போன்களின் விலையும் அநியாயத்திற்கு அதிகரிக்கிறது. 

செல்போன் விலை:

இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் இந்திய மதிப்பின்படி, ரூ.84,000 மற்றும் அதற்கு மேல் உள்ள விலையில் இருக்கும் செல்போன்களின் விலை 18 சதவிகிதம் அதிகரித்துள்ளதாம். இந்த வகை போன்களில் மேம்பட்ட அம்சங்களும், சிறந்த திறன்களும் இருப்பதால், மக்கள் இந்த வகை போன்களை விரும்புகின்றனர். இந்த வகை போன்களின் விலை, அமெரிக்க டாலரின் படி $1,000 ஆகும். 

இந்த விலையில் இருக்கும் போன்களில் நிருவனங்கள் GenAI தொழில்நுட்பங்களை அளிக்கவும் தீவிரம் காட்டி வருகின்றனவாம். இதைத்தொடர்ந்து, 3nm மற்றும் 4nm போன்ற மேம்பட்ட Process Nodes-களையும் போன் தயாரிப்பு நிருவனங்கள் இதில் இணைக்க ஏற்றுக்கொள்கின்றன. இதனாலும் அடுத்த ஆண்டில் செல்போன் விலையும், அதன் உற்பத்தியும் அதிகரிக்கலாம் எனக்கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | அமேசானில் ரூ.12000 விலையில் கிடைக்கும்... சில அசத்தலான 5G போன்கள்... மிஸ் பண்ணாதீங்க

மேலும் படிக்க | தினம் ரூ.6 மட்டுமே.. 84 நாட்கள் வேலிடிட்டியுடன் ஜியோவின் மலிவான ரீசார்ஜ் பிளான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News