இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் நாள்தோறும் அங்கிருந்து தமிழகத்திற்கு பலர் குடும்பம் குடும்பமாக படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால், ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடற்கரைப் பகுதிகளில் கடலோர காவல் படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையில் வாழ வழியில்லாமல் தமிழகத்திற்கு தஞ்சம் அடைய வரும் அவர்களை முகாமிற்கு அனுப்பி தமிழக அரசு சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே, இலங்கையில் வாடும் தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தொலைபேசி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார். இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், தலைநகர் கொழும்பிலும் தமிழர்கள் அதிகளவு வசிக்கின்றனர்.
அவர்களுக்காகவும், அங்குள்ள மலைவாழ் தமிழர்களின் நலன் கருதியும் தமிழ்நாடு அரசு அத்தியாவசிப் பொருட்களான அரிசி, பருப்பு மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வாயிலாக அனுப்புவதற்குத் தயாராக உள்ளதாகவும், மனிதாபிமான நோக்கில் அனுப்பப்படும் இத்தகைய பொருட்களை உணவின்றித் தவிக்கும் தமிழர்களுக்கு கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் வினியோகிக்க உரிய அனுமதியையும், ஏற்பாடுகளையும் செய்ய வேண்டுமென்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் படிக்க | கச்சத்தீவை மீட்டெடுக்க இது சரியான தருணம்: விஜயகாந்த்
தமிழக முதலமைச்சரின் இந்த உதவிக்கு இலங்கையில் உள்ள தமிழ் அமைப்புகள் நன்றி தெரிவித்துள்ளன. அதே சமயம், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழக முற்போக்கு கூட்டணித் தலைவருமான மனோ கணேசன் மற்றொரு கோரிக்கையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ட்விட்டர் மூலம் முன்வைத்துள்ளார். அதில், ‘தமிழக முதல்வரின் உதவி கரங்கள், எல்லா தமிழருக்காகவும் நீள்வதை நன்றியுடன் வரவேற்கும், அதேவேளை, இன்று இலங்கையில் நிகழும் ஏகோபித்த போராட்டங்களை அனுசரிக்கும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சமூகநீதி கரங்கள் இனவரம்பில்லாமல் எல்லா இலங்கையருக்காவும் நீள வேண்டுமென கோருகிறோம்’ என்று பதிவிட்டுள்ளார்.
தமிழக முதல்வரின் உதவி கரங்கள், எல்லா தமிழருக்காகவும்
நீள்வதை நன்றியுடன் வரவேற்கும், அதேவேளை, இன்று இலங்கையில் நிகழும் ஏகோபித்த போராட்டங்களை அனுசரிக்கும் விதமாக முதல்வரின் @mkstalin சமூகநீதி கரங்கள் இனவரம்பில்லாமல் எல்லா இலங்கையருக்காவும் நீள வேண்டுமென கோருகிறோம். @CMOTamilNadu pic.twitter.com/sWUWf4Mkvj— Mano Ganesan (@ManoGanesan) April 10, 2022
இலங்கைத் தமிழர்களுக்காக மட்டும் உதவிக்கரங்கள் நீளாமல், இனப்பாகுபாடு கடந்து அனைவருக்கும் உதவி செய்யுமாறு கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
மேலும் படிக்க | ‘உடனடியாக மருந்துகளைக் கொடுங்க’ - உலக நாடுகளிடம் கைநீட்டும் இலங்கை டாக்டர்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR