புதுச்சேரி தியாகுமுதலியார் வீதியை சார்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி தேவி என்கிற மிதிலாதேவி. மிதிலாதேவியை சசிகுமார் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தீனா(14), தீபா(9) என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர். சசிகுமார் தனது மனைவியை சந்தேகம் கொண்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
இதனால் இருவரும் கடந்த 10 மாதமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கணவரை பிரிந்த தேவி தனது தாய் வீட்டில் பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார்.
மேலும், தேவி வீட்டு வேலை செய்து தனது குழந்தைகளை பராமரித்து வந்துள்ளார். இவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையிலும் கணவர் சசிகுமார் மனைவி தேவியின் நடத்தை மீது சந்தேகம் அடைந்து அவ்வப்போது தகராறு செய்து வந்துள்ளார்.
மேலும் படிக்க | இந்தியாவிற்குள் நுழைந்த குரங்கு அம்மை; ‘இந்த’ அறிகுறிகள் இருந்தால் எச்சரிக்கை தேவை
மனைவி தேவி வேலை செய்யும் இடங்களுக்குச் சென்று சசிகுமார் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த மே மாதம் 11ம் தேதி, 12 மணியளவில் சசிகுமார் தனது மனைவி வேலை செய்யும் இடத்திற்கு சென்று வாக்குவாதம் செய்துள்ளார்.
அப்போது ஆத்திரமடைந்த அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தேவியின் மார்பு, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் சராமரியாக குத்தி உள்ளார்.
இதனை பார்த்தவர்கள் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இந்த கொடூர சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இதனிடையே மனைவி தேவி தற்போது வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க | சிங்கப்பூர் வாசிகளே உஷார்: மெல்ல அதிகரிக்கிறது குரங்கம்மை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ