அண்ணன் திருமாவளவன் இந்த அளவிற்கு தரம் தாழ்ந்து போவார் என்று என் அரசியல் வாழ்க்கையில் நான் நினைத்ததே கிடையாது என தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியினுடைய உறுப்பினர் சேர்க்கை தமிழகம் முழுக்க பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகின்ற நிலையில் கோவை, தென் சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களின் பொறுப்பாளரும் முன்னாள் தெலுங்கானா பாண்டிச்சேரி ஆளுநரமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கினார்.
மேலும் படிக்க | தமிழ்நாட்டுக்கு மஞ்சள் எச்சரிக்கை.. கனமழை வெளுத்து வாங்கப்போகுது - உஷார் மக்களே!
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகம் முழுக்க இருக்கின்ற பல்வேறு இடங்களில் கணிசமான உறுப்பினர்கள் கட்சியில் சேர்ந்து வருவதாகவும், 2026 தேர்தலில் தமிழகத்தில் பாஜக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறினார். நேற்று நடந்த விசிக மது ஒழிப்பு மாநாட்டில் திருமாவளவன் பேசியது குறித்தான செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த அவர், இதற்கு முன் இருந்தே திமுக கூட்டணியில் இருந்த திருமாவளவனுக்கு திடீரென்று மது ஒழிப்பு கொள்கையை முன்னெடுப்பது ஆச்சரியமாக உள்ளது எனவும், தன் கட்சியை சார்ந்த ஒருவரே பேச வைத்து விட்டு அதிக சீட்டுக்காக இந்த மாநாட்டை நடத்துகிறார் எனவும் பேசிய அவர், காந்திய கொள்கை மீது முரண்பாடாக இருக்கும் திருமாவளவன் மது ஒழிப்பை பற்றி பேசுவது எப்படி சரியாகும் என பேசினார்.
அரசியல் வாழ்வில் இதுவரை தனி நபர் தாக்குதல் நான் நடத்தவில்லை என்று பேசிய தமிழிசை சவுந்தரராஜன், திருமாவளவன் இவ்வளவு தரம் தாழ்ந்து பேசுவார் என நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை. மேலும் பாட்டிலை திறக்கிறார் என்று நான் சொல்லவில்லை, அவர்தான் பேசினார் எனவும் தன் தொண்டர்களுக்கு அகிம்சை வழிக்கு முரணாக திருப்பி அடி என்று கற்றுக் கொடுத்ததும் அவர்தான் அண்ணன் திருமாவளவன் அரசியல் காலத்தில் இதுவரை பேசிய உரையில் நேற்று பேசியது அவர் அரசியல் வாழ்க்கையில் கரும்புள்ளி என்றும் கூறினார்.
திருமாவளவன் பேச்சு
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். கடந்த தேர்தலில் வெற்றிக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். கூட்டத்தில், மதுவைத் தவிர்ப்பது எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றிப் பேசுவதற்காக பல பெண்கள் ஒன்று கூடினர். நீண்ட காலத்திற்கு முன்பே புத்தர் இதைப் பற்றி பேசியதாக அவர் குறிப்பிட்டார். மக்கள் எந்த சாதி அல்லது மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பது முக்கியமில்லை என்றும் அவர் கூறினார். கவர்னர் இருந்ததால் காந்தி மண்டபம் இடத்திற்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஆனால் நான் காந்தியை அவமரியாதை செய்துவிட்டேன் என்று தமிழிசை கூறுகிறார். மதசார்பின்மையை சொன்னதற்காக காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த மேடைக்கு வந்த தலைவர்களால் விசிகவின் நோக்கம் மேம்பட்டுள்ளது என்று கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ