இன்று முதல் தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன.
2009-ம் ஆண்டுக்குப் பிறகு, குடும்ப அட்டைகளில் உள்தாள் ஒட்டப்பட்டு வருகிறது. எட்டு ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின், சென்னை தவிர்த்த மற்ற பகுதிகளில், இன்று முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஸ்மார்ட் கார்டுகளைப் பொதுமக்களுக்கு வழங்கி துவக்கிவைக்கிறார். தமிழகம் முழுவதும் 15 லட்சம் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வினியோகம்செய்யப்பட உள்ளன.
குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண் மற்றும் செல்போன் எண்கள், இந்த ஸ்மார்ட் கார்டு உடன் இணைக்கப்பட்டுள்ளது. 'பான் கார்டு' வடிவில் இருக்கும் இந்த மின்னணு ரேஷன் கார்டில், முதல் பக்கத்தின் மேல் பகுதியில் அரசு முத்திரையுடன், 'உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை' என, அச்சிடப்பட்டிருக்கும்.
இதில், 'கியூ-ஆர்' ரகசியக் குறியீடும் இருக்கும். இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டை ஸ்வைப்செய்து, பொருள்களை வாங்க வேண்டும். வாங்கிய பொருள் குறித்த விபரங்கள் எஸ்எம்எஸ் மூலம் நாம் பதிவு செய்துள்ள தொலைபேசி எண்ணுக்கு வந்துவிடும்.