Vijay | விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு படு ஜோராக நடந்து முடிந்துள்ளது. 3 லட்சம் பேருக்கு மேல் மாநாட்டில் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநாடுக்கு முன்பு வரை விஜய் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. அதற்கு ஏற்றார் போல மாநாட்டில் அனல் பறக்க பேசி அசத்திவிட்டார். அதிலும், உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் நேற்று சொன்ன அந்த குட்டி ஸ்டோரி தான் ஹைலைட்.
ரஜினிகாந்த் இதேபோல கட்சியின் பெயரும், கொடியும் அறிவிக்கப்படும் என்று கூறிவிட்டு அதன்பிறகு உடல்நலனை குறிப்பிட்டு அப்படியே அரசியலுக்கு குட்-பை சொல்லிவிட்டு சென்றுவிட்டார். கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினாலும், அவரால் பெரிதாக ஜொலிக்க முடியவில்லை. இந்த சூழலில் தான் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களிலில் டாப் லிஸ்டில் இருக்கும் விஜய் சினிமாவில் இனி நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டு அரசியலுக்கு வந்துவிட்டார்.
2026 சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற தனது எண்ணத்தை ஆவேசமாக பேசிய விஜய், நேரடியாக திமுக தான் தனது அரசியல் எதிரி என்பதை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | தமிழகத்தை கொள்ளையடிக்கும் திராவிட மாடல் ஆட்சி-விஜய் அட்டாக்!!
அவர் அதிமுக குறித்து பேசாததற்கு அவர் கூட்டணி அமைத்துக் கொள்ளும் முடிவில் இருப்பதாக கூறப்பட்டாலும், ஜெயலலிதாவாக தன்னை நினைத்து திமுகவை எதிர்க்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் பேசப்படுகிறது. அதிமுக கட்சி இப்போது பிளவு பட்டு உள்ளதால், பலவீனமாக கட்சியாக பார்க்கப்படுகிறது. இதனால் அந்த வெற்றிடத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ள விஜய் முடிவெடுத்துள்ளார் என்பது தெள்ளத்தெளிவாக புரிகிறது. திமுகவை நேரடியாக எதிர்த்து அரசியல் செய்தவர் ஜெயலலிதா என்பதால், அந்த ஸ்டைலை விஜய் பின்பற்றுவதாகவும் அதிமுகவினர் பேசி வருகின்றனர். அதோடு நேற்றைய மாநாட்டுக்கு வந்த தொண்டர்கள் பெரும்பாலும் சொந்த செலவில் தான் வந்துள்ளனர். கூட்டத்தை கூட்ட பணம் செலவு செய்யப்படவில்லை என்றும் தவெகவினர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த கூட்டம் நடிகர் விஜய்யை பார்க்க கூடிய கூட்டமா அல்லது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்க வந்த கூட்டமா என்பதில் குழப்பம் உள்ளது.
மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகள் கொண்டது தவெக என விஜய் பேசியுள்ளார். கொள்கை கோட்பாட்டளவில் திராவிடம், தமிழ் தேசியம் ஆகிய இரண்டுக்கும் பிரிவினை இல்லை, இரண்டும் நமது இரண்டு கண்கள் என்றும் விஜய் கூறியுள்ளார்.
கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் சம உரிமை என்று விஜய் பேசி இருப்பது, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட சிறிய கட்சிகளுக்கு வலைவீசத்தான் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். விஜய் கட்சி தொடங்கி இருப்பது திமுக, அதிமுக, பாஜக போன்ற கட்சிகளுக்கு சவாலாக அமையுமா? இல்லை அரசியல் களத்தில் விஜய் சறுக்கலை சந்திப்பாரா? ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை நிறப்பும் தொனியில் விஜய் ஆவேசமாக மேடையில் பேசியது மக்களிடம் எடுபடுமா என்பதை எல்லாம் பொருத்திருந்து பார்க்கலாம்.
மேலும் படிக்க | தவெக மாநாடு | 7 மணி கெடு.. காவல்துறை முக்கிய மெசேஜ், பரபரக்க மேடைக்கு வந்த விஜய்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ