கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அவரது உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு வானதி ஸ்ரீனிவாசன், இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அறிக்கையில் அவர் கூறியதாவது, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அவர்களுக்கு எதிரான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இது. தமிழகத்தில் கடந்த அதிமுக அரசாங்கத்தில் அந்த ஆட்சியை காப்பாற்றுகின்ற ஒரு மிகப்பெரிய பொறுப்பினையும் அதே சமயம் கொங்கு மண்டலப் பகுதிக்கு மிக அதிகமான திட்டங்களை கொண்டு வருவதற்காக பல்வேறு திட்டங்களில் முன்னெடுப்பும் செய்திருக்கின்ற எஸ்.பி.வேலுமணி அவர்கள் மீது மிகுந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு திராவிட முன்னேற்றக் கழகம் செயல்பட்டு வருகின்றது. குறிப்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எஸ்.பி.வேலுமணி மீது தனிப்பட்ட முறையில் மிகுந்த கால் புணர்ச்சி கொண்டிருக்கிறார்.
திரு @mkstalin அவர்களே!
அரசியலில் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காதீர்கள். @SPVelumanicbe @EPSTamilNadu @AIADMKOfficial pic.twitter.com/ZfRqpp6iZP
— Vanathi Srinivasan (@VanathiBJP) August 11, 2021
தேர்தலுக்கு முன்பாகவே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதலில் வேலுமணியின் அரசியல் வாழ்க்கையில் முடிப்போம் என்கிற மாதிரியான பல்வேறு விஷயங்களை மக்கள் முன்பாக பேசி வந்தார் ஸ்டாலின்.
அதற்குப் பின்பாக தேர்தலில் கொங்கு மனதில் ஒரு தொகுதியை கூட திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெற முடியாத சூழ்நிலை ஏற்படுவதற்கு வேலுமணி தான் மிக முக்கியம் காரணம் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வேலுமணி மீது கொண்டிருந்த வன்மம் காரணமாக அவருடைய வீடு மற்றும் அலுவலகங்கள் ரெய்டு மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கை என்பது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு வரக்கூடிய நடவடிக்கையாகும்.
தேர்தலில் வருகின்ற வெற்றி தோல்விகளை என்றுமே நிரந்தரமாக முடியாது. இதை வைத்துக்கொண்டு அரசியல் எதிரிகளை பழிவாங்க நடவடிக்கை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
Also Read | எஸ்.பி.வேலுமணியின் நிறுவனத்தில் இரண்டாவது நாளாக தொடரும் சோதனை!!
வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் கொங்கு மண்டலத்தில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும். அந்த வெற்றிக்கு மிகப் பெரிய தடையாக இருப்பவர் வேலுமணி என்கிற காரணத்தினால் அவரை மனரீதியான உறுதி குறைப்பதற்காகவும், அவரின் சுற்று வட்டாரத்தை அச்சுறுத்துவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நாங்கள் நம்புகிறோம். இம்மாதிரி அரசியல் எதிரிகளை பழி வாங்கும் நடவடிக்கையை திராவிட முன்னேற்றக் கழகம் நிறுத்திக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
அதிமுகவும் பாஜகவும் கூட்டணியில் உள்ள நிலையில் தனது கூட்டணிக் கட்சியான அதிமுக முன்னாள் அமைச்சருக்கு ஆதரவாக வானதி ஸ்ரீனிவாசன் பேசியுள்ளது அதிமுகவினருக்கு நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது.
Also Read | நியாயத்தின் பக்கம் நின்று எனக்கு நம்பிக்கையூட்டிய அண்ணன்கள் EPS, OPS-க்கு நன்றி: வேலுமணி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR