Smuggling: தேனியில் யானை தந்தம் பறிமுதல்! கடத்த முயன்ற 10 பேர் கைது

தேனியில் யானையை வேட்டையாடி  தந்தங்களை எடுத்து வந்து விற்க முயற்சியா?  வனத்துறையினர் தீவிர விசாரணை

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Jan 23, 2022, 03:12 PM IST
  • தேனியில் யானையை வேட்டையா?
  • தேனியில் யானை தந்தம் பறிமுதல்!
  • கடத்த முயன்ற10 பேர் கைது
Smuggling: தேனியில் யானை தந்தம் பறிமுதல்! கடத்த முயன்ற 10 பேர் கைது title=

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் வத்தலகுண்டு சாலையில் யானை தந்தங்கள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்ய முயற்சிப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதனை அடுத்து, தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறை வனச்சரக அதிகாரி டேவிட் ராஜ் தலைமையில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டது.

அப்போது சந்தேகிக்கும் படி இருந்தவர்களை வனத்துறையினர் சோதனை செய்ததில் யானை தந்தங்களை கடத்தி பதுக்கி விற்க முயன்றது தெரியவந்தது.

கடத்தல்காரர்களிடம் இருந்து 2 யானை தந்தங்களை வனத்துறையினர் (Forest Officials) பறிமுதல் செய்து, கடத்தல் சம்பந்தமாக 10 பேரை கைது செய்தனர். 

யானை தந்தங்கள் பதுக்கி வைத்திருந்து விற்பனை செய்ய முயற்சித்த வழக்கில் ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, தேவதானப்பட்டி பகுதியைச் சேர்ந்த பத்து நபர்களை தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறையினர் கைது செய்தனர்.

ALSO READ | தமிழகத்தில் வார  இறுதி ஊரடங்கு! இந்த சேவைகள் உண்டு 

கைது செய்யப்பட்டவர்களை, தேவதானப்பட்டி வனச்சரக அலுவலகத்தில் வைத்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

யானைத் தந்தங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன என்பது தொடர்பான தெளிவான தகவல்கள் விசாரணையில் தெரியவரும்.

பிடிபட்டவர்கள் வருஷநாடு மற்றும் மேகமலை வனப்பகுதிகளில் யானைகளை கொன்று தந்தங்களை எடுத்து விற்க முயன்ற உள்ளனரா என்பது உட்பட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

ALSO READ | தமிழகத்தில் வார இறுதி ஊரடங்கு! இந்த சேவைகள் உண்டு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News