ஜெ,, மரணம் தொடர்பாக 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு சம்மன்!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

Last Updated : Jan 25, 2018, 04:26 PM IST
ஜெ,, மரணம் தொடர்பாக 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு சம்மன்!! title=

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்ட 74 நாட்கள் சிகிச்சை அளித்தும் பலன் இன்றி டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை, ஓய்வு பெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையிலான, விசாரணை கமிஷன் விசாரித்து வருகிறது. இந்த கமிஷன், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், அப்பல்லோ மருத்துவமனை, முன்னாள் தலைமை செயலர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராமமோகன ராவ், உறவினர்கள் தீபா, தீபக் உள்ளிட்ட பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில்,சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். அப்போது  சசிகலா விளக்கம் அளிப்பது தொடர்பாக  15 நாள் அவகாசம் கேட்கப்பட்டது. 

இதுகுறித்து ஆணையம் 30-ந்தேதி தேவையான உத்தரவுகளை பிறப்பிக்கும் என தெரிகிறது. ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை தடவியல் சோதனைக்கு அனுப்பி உண்மையை தெரிவிக்க வேண்டும். என கூறினார்.

இந்நிலையில், ஆறுமுகசாமி கமிஷன், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் வெங்கட்ராமன், ராமலிங்கம், ஜெயஸ்ரீ முரளிதரன், விஜயகுமார் ஆகியோருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

ஜெயலலிதாவின் செயலராக இருந்து ஓய்வு பெற்ற வெங்கட்ரமணன் வருகிற 30-ந்தேதியும், விஜயகுமார் 31-ந்தேதியும், ராமலிங்கம் பிப்ரவரி 1-ந்தேதி, ஜெயஸ்ரீ முரளிதரன் 2-ந்தேதியும் ஆஜராக உத்தரவிடப் பட்டுள்ளது.

இவர்களில் வெங்கட ரமணன் ஓய்வு பெற்று விட்டார். மற்ற 3 பேரும் தற்போது அரசு பணியில் உள்ளனர்.

இதேபோல் ஜெயலலிதா கார் டிரைவர் ஐயப்பன், பிப்ரவரி 8-ந்தேதி ஆஜராகவும், சசிகலாவின் செயலாளர் கார்த்திகேயன் பிப்ரவரி 5-ந்தேதி ஆஜராகவும் சம்மன் அனுப்பி உள்ளது.

Trending News