வெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் அளித்த மனுவின் மீதான விசாரணையை வரும் 16-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது!
INX மீடியா நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக அன்னிய நிதி முதலீடு பெற உதவியதாக கார்த்தி சிதம்பரம் மீது CBI வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கின் விசாரணையில் அவர் தேடப்படும் நபராகவும் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் லுக் அவுட் நோட்டிசிற்கு தடை விதிக்க கோரி, கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வு விசாரித்தது.
விசாரனையின் போது CBI தரப்பில்... வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இப்பயணத்தால் சாட்சியங்கள் கலைக்க கூடும் எனவும் எதிர்ப்பு தெரிவித்தது.
இதனையடுத்து இந்த மனுவின் மீதான விசாரணையை வரும் 16-ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்!